வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விடாமுயற்சிக்கு ஆட்டம் காட்டிய 5 முக்கிய காரணங்கள்.. கும்பிடு போட்ட அஜித்

Ajith in Vidamuyarchi: விடாமுயற்சி பேருக்கு ஏத்த மாதிரி கடும் முயற்சியில் தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்நேரம் ரிலீஸ் ஆகி லாபம் பார்த்து இருக்க வேண்டிய படம் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அஜித் ரசிகர்கள் மனம் தளராமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அசர்பைஜானில் ஷூட்டிங்கை மும்முரமாக நடத்தி வந்த படக்குழு இப்போது பெரிய கும்பிடாக போட்டு வந்து விட்டதாம். இதற்கு பின்வரும் 5 முக்கிய காரணங்கள் தான் சொல்லப்படுகிறது.

அதாவது அங்கு இருக்கும் கிளைமேட் படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருந்திருக்கிறது. அதை அடுத்து உணவு பிரச்சனையும் வாட்டி இருக்கிறது. மேலும் மொழி புரியாமல் சூட்டிங் நடத்துவதும் குதிரைக்கொம்பாக இருந்ததாம். அதேபோன்று ஷூட்டிங் உபகரணங்கள் விசயத்திலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Also read: லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

இது எல்லாவற்றிற்கும் மேலாக டெக்னீசியன்கள் உள்ளிட்ட பலருக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் யோசிக்காமல் அங்கு சென்ற படக்குழு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதனாலேயே இப்போது அசர்பைஜானுக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டார்களாம்.

அதைத்தொடர்ந்து இப்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள்ளாகவே தளபதி 68 படப்பிடிப்பு அதை சுற்றியுள்ள இடங்களில் நடப்பதால் தான் இடத்தை மாற்றி விட்டார்கள் என்ற தகவல் தீயாக பரவி கொண்டிருக்கிறது. இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Also read: அஜித் ஆரம்பிக்கும் மருத்துவ முகாம்.. விடாமுயற்சியில் ஒரு புது முயற்சி

Trending News