வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி ஃபிட்னஸிற்கு இதுதான் காரணம்.. விஜய் என்றும் இளமையாக இருக்க கடைப்பிடிக்கும் 5 விஷயங்கள்

Thalapathy Vijay: சினிமாவில் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ, சைக்கிளிங் வீடியோ, டயட் வீடியோ என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த மனுஷன் எப்படி தான் இன்னமும் அப்படியே இளமையாக இருக்கிறாரோ என எல்லோரையும் கேள்வி கேட்க வைத்திருப்பது, நடிகர் விஜய் மட்டும்தான்.

தன்னுடைய மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அவர் இயக்கப் போகின்ற படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பதற்கு கூட கரெக்டாக இருக்கிறார் விஜய். 50 வயதை நெருங்கும் போதும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞனாக தன்னை காட்டிக்கொள்ள விஜய் இந்த ஐந்து விஷயங்களை தான் முக்கியமாக கடைபிடிக்கிறாராம்.

விஜய் கடைபிடிக்கும் ஐந்து விஷயங்கள்

விஜய் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது தான் அவருடைய கட்டுக்கோப்பான உடம்பிற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் இருக்கும் நாட்களிலும் சரி, இல்லாத நாட்களிலும் சரி, சரியாக மாலை 7 மணிக்கு முன்பு இரவு உணவை முடித்துக் கொள்வாராம். அதை தாண்டி எந்த ஒரு உணவையும் சாப்பிடுவது கிடையாதாம்.

Also Read:விஜய் மேல் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி.. ஒரே நாளில் கெட்ட பெயரை மாற்றிய தளபதி

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இரவு சரியாக ஒன்பதரை மணிக்கு தூங்கி, அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை விஜய் கடைப்பிடித்து வருகிறார். இரவு நேர ஷூட்டிங், பார்ட்டி என எந்த ஒரு கமிட்மெண்டையும் வைத்துக் கொள்ளாமல், சரியாக தூங்கும் நேரத்தை எப்போதுமே தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

அதே போன்று படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் விஜய் பெரும்பாலும் அசைவ உணவை எடுத்துக் கொள்வதே கிடையாதாம். கிடைக்கும் பிரேக் நேரங்களில் தேவையில்லாமல் வெட்டி கதைகளை பேசிக்கொண்டு இருக்க மாட்டாராம். உடலுக்குத் தேவையான ஓய்வு நேரத்தை சரியாக கொடுப்பதும் அவருடைய உடம்பு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் பெரும்பாலும் ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவது கிடையாது. எப்படிப்பட்ட பிசியான வேலையாக இருந்தாலும் வீட்டு உணவை தான் சாப்பிடுகிறார். வெளிநாடு ஷூட்டிங் செல்லும் பொழுது தான் வீட்டு சாப்பாடு சாப்பிடுவது கிடையாது. அதேபோன்று விஜய்க்கு டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கம் சுத்தமாக கிடையாது. இன்னும் விஜய் இளமையாக இருப்பதற்கு இவை எல்லாம் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

Also Read:புஸ்ஸி ஆனந்த் செய்த வேலையால் அசிங்கப்பட்ட விஜய்.. கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தளபதி

Trending News