வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு எபிசோடுக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் 5 சீரியல் நடிகைகள்.. டி ஆர் பி-காக வாரி வழங்கும் சன் டிவி

5 Serial Actress Salary: பொதுவாக எத்தனையோ சேனல்கள் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணமாக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனாலும் மக்களை அதிக அளவில் கவர்ந்து முதல் இடத்தில் இருப்பது எப்போதுமே சன் டிவி சேனல் தான். அந்த வகையில் இதில் ஒளிபரப்பப்படும் நாடகம் மக்கள் மத்தியில் சிம்ம சொப்பனமாக ஒய்யாரத்தில் இருந்து வருகிறது.

அதனாலயே சன் டிவியில் நடித்தால் கெத்தாக இருக்கும் என்று பல நட்சத்திரங்களும் இதில் நடித்து கொண்டு வருகிறார்கள். அப்படி நடிக்கும் நடிகைகள் சீரியலுக்காக வாங்கும் சம்பளம் என்னவென்று தற்போது பார்க்கலாம். அந்த வகையில் ஆரம்பத்தில் ஹீரோயின் தோழியாக சைடு கேரக்டரில் நடித்து வந்த பபாப்ரி கோஷ் திடீரென்று முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டவர் இல்லம் நாடகத்தில் கயல் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடைய சம்பளம் 10000 ரூபாய்.

Also read: திடீரென்று சீரியலில் இருந்து விலகி, சைலண்டா திருமணத்தை முடித்த சன் டிவி நடிகை.. வைரலாகும் கல்யாண புகைப்படம்

அடுத்ததாக ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகி வந்த கேபிரில்லா செல்லஸ், முதன் முதலாக சின்னத்திரையில் சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். அதனாலயே இந்த நாடகம் தற்போது இரண்டாம் பாகம் என்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அப்படிப்பட்ட இவரின் சம்பளம் 12000.

இதற்கு அடுத்து விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து அனைவரது மனதிலும் சந்தியாவாக இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதற்குப்பின் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். அடுத்ததாக இரண்டு குழந்தையை பெற்ற பின்பு சன் டிவியில் தற்போது இனியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய சம்பளம் 20000 ரூபாய்.

Also read: 35 வருட சினிமா வாழ்க்கையில் மாரிமுத்து சொத்து மதிப்பு.. குணசேகரனுக்கு வாரி வழங்கிய சன் டிவி

அடுத்ததாக சின்னத்திரையில் என்ட்ரி ஆனதும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் திரும்பியவர் தான் சைத்ரா ரெட்டி. அதன் பின் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் ஆணிவேராக நடித்து வருகிறார். இந்த நாடகம் இல்லத்தரசிகள் மட்டும் பார்ப்பது இல்லாமல் பல இளைஞர்களும் பார்க்கும் அளவிற்கு கயல் உடைய பெர்பார்மன்ஸ் அல்டிமேட் ஆக இருக்கும். அப்படிப்பட்ட இவருடைய சம்பளம் 20000 ரூபாய்.

இவர்களைத் தொடர்ந்து சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருந்து அதிகமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா அவருடைய சம்பளம்  20000 ரூபாய். இவர் இதற்கு முன்னதாக கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் முதன் முதலாக தமிழுக்கு வந்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

Also read: டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்

Trending News