வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டும் 5 சீரியல்கள்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த சீரியல்

Serial Trp Rating: சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களும் எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்து அதில் யார் பெஸ்ட் என்று காட்டும் வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் முதல் ஐந்து இடத்தை எந்த சீரியல்கள் பிடித்திருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

கயல்: கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் எழிலை திருமணம் செய்த பிறகாவது கயல் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு அடுத்தும் பிரச்சினைகளும் சதிகளும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இப்பொழுது எழிலின் அம்மா செய்யும் ஒவ்வொரு விஷயங்களாலும் கயல் மற்றும் குடும்பம் அவஸ்தை பட்டு வருகிறது. அதை தட்டிக் கேட்கும் விதமாக எழில், கயலுக்கு சப்போர்ட் செய்து வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.95 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

சிங்க பெண்ணே: ஆனந்தி கார்மெண்ட்ஸ் இல் எடுபடி வேலை மட்டும்தான் பார்க்க முடியும் என்று கருணாகரன் மற்றும் மித்ரா தப்பு கணக்கு போட்டு வைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது அதை தவறு என்று சுட்டிக்காட்டும் விதமாக ஆனந்தி தைக்கிற மிஷினில் உட்கார்ந்து போட்டியில் ஜெயிக்கும் படி சவாலை வென்று விட்டார். இடையில் மித்ரா செய்த சதியில ஆனந்தி சிக்கி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அன்பு மற்றும் மகேஷ் ஊக்குவித்ததால் ஆனந்தி வெற்றியடைந்து கருணாகரன் மற்றும் மித்ராவின் மூஞ்சியில் கரியை பூசி விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.92 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மூன்று முடிச்சு: நந்தினி மீது சூர்யாவுக்கு இருப்பது காதலாக இருந்தாலும் அதை வெளிக்காட்ட தெரியாமல் சுந்தரவல்லியை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதால் சூர்யா மீது எரிச்சல் படும் அளவிற்கு நந்தினி கோபப்பட்டு வருகிறார். ஆனாலும் இந்த நரகத்திலிருந்து எப்படி தப்பிக்க என்று தெரியாத நந்தினி ஒவ்வொரு நிமிஷமும் வேதனைப்பட்டு வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.63 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: ஆதிரை மற்றும் பிரபுவுக்கு திருமணம் ஆகியிருந்தாலும் தற்போது வரை இவர்கள் இருவரும் சந்தோஷமாக இல்லாமல் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் படியாக சில விஷயங்கள் அமைந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது பிரபு மற்றும் அவருடைய தம்பிக்கு ஏற்பட்ட சண்டையில் ஆதிரை பிரபுவின் தம்பிவை அடித்ததால் மொத்த குடும்பமும் ஆதிரைக்கு எதிராக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.95 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

ராமாயணம்: சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் தினமும் ஒளிபரப்பாகும் படி மாலை 6.30 ஒளிபரப்பு செய்து விட்டார்கள். அந்த வகையில் மாலையில் ஒளிபரப்பாகிய நிலையில் இருந்து தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற்று வருகிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ஜொலிக்கும் என்பதற்கு ஏற்ப 8.65 புள்ளைகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

Trending News