Serial Trp Rating List: குடும்ப இல்லத்தரசிகளின் மனதை கவரும் வகையில் சின்னத்திரை மூலம் தொடர்ந்து ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் எந்த சீரியல்கள் அதிகமாக மக்களை கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அதன்படி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்ப்போம்.
சில சீரியல்கள் கதையே இல்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகுவதால் பெண்கள் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் தான் பிரேம் டைமிங் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்பொழுதுமே அதிக புள்ளிகளைப் பெற்று விடும். அந்த வரிசையில் தான் இந்த வாரம் கயல் சீரியல் 10.01 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. வழக்கம்போல பிரச்சனைகளையும் குடும்ப பாரங்களையும் தூக்கி சுமந்து போராடும் கயல், எழிலின் சந்தோஷத்தை கொஞ்சம் கூட யோசித்துப் பார்ப்பதே இல்லை. பாவம் இந்த குடும்பத்தில் எழிலும் மாட்டிக் கொண்டு அவஸ்தை பட்டு வருகிறார்.
அடுத்ததாக காதலை சொல்லியும் ஆனந்தி தன்னுடைய காதலை மறுத்தது மட்டுமில்லாமல் தன்னை ஒரு தெய்வமாக நினைப்பதால் மகேஷ் சுக்கு நூறாக உடைந்து விட்டார். இதனை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஆனந்தி தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு குடித்துவிட்டு தகராறு பண்ண ஆரம்பித்து விட்டார். மகேஷின் நிலமையை பார்த்து அன்புவும் இறக்கப்பட்டு உண்மையை சொல்ல விடாமல் ஆனந்தியை தடுத்து விடுகிறார். அதோடு விடாமல் மகேஷ் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆனந்தியை பலிகாடாக அன்பு சிக்கவைத்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் 9.86 புள்ளிகளைப் பெற்று சிங்க பெண்ணே இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 9.76 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இருக்கிறது. சுந்தரவல்லிக்கு பிடிக்கவில்லை என்றாலும் நந்தினிக்கு தாலி பெருக்கு பங்க்ஷன் பண்ணி சூர்யா அவருடைய கடமையை செய்து விட்டார். இருந்தாலும் குடிப்பதை ஒரேடியாக நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க நந்தினி பக்கம் இருந்தால் இன்னும் இந்த கதை சூடு பிடிக்கும்.
அடுத்ததாக மருமகள் சீரியலில் ஆதிரை அப்பாவை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார் என்று புரிந்து கொண்ட பிரபு மாமனாரிடம் பேசலாம் என்று ஆதிரையின் சித்தி வீட்டுக்கு போகிறார். ஆனால் அங்கே ஆதிரையின் சித்தி, பிரபுவின் மாமனாரை பார்க்க விடாமல் தடுத்ததோடு மட்டுமில்லாமல் முகத்தில் தண்ணீர் ஊற்றி அசிங்கப்படுத்தி விடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆதிரை பிரபுவின் நல்ல மனசை புரிந்து கொள்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் 9.01 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் இந்த ஒரு சீரியல் மட்டும் தான் அதிக புள்ளிகளைப் பெற்று டாப் 5 இடத்திற்கு வரும். ஆனால் சில மாதங்களாக கதை சுவாரஸ்யம் இல்லாததால் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியது. ஆனால் அதை தற்போது சரி செய்து சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணி மாட்டிக்கொண்டதால் இந்த டிராக் மக்களை மிகவும் கவர்ந்தது. அந்த வகையில் இந்த வாரம் 8.87 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதனை அடுத்து 8.59 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் ராமாயணம், 8.31 புள்ளிகளை பெற்று அன்னம் சீரியல் ஏழாவது இடத்திலும், 7.16 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் எதிர்நீச்சல் 2 சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் எதிர்நீச்சலின் முதல் பாகம் அதிக புள்ளிகளை பெற்று எப்பொழுதுமே முதலிடத்தில் ஒய்யாரமாக ஜொலித்தது. ஆனால் தற்போது இரண்டாம் பாகம் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் டாப் 5 இடத்திற்கு கூட வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு வருகிறது.