புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜியின் 5 திறமைகள்.. விட்டா ஆண்டவருக்கே டஃப் கொடுப்பார் போல

Multi Talented Actor RJ Balaji: பொதுவாக ஒருவருக்கு ஏதாவது ஒரு திறமை இருந்தாலே ஓவர் அலப்பறை செய்து கொண்டு பந்தாவாக இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் பன்முகத் திறமையை வைத்திருந்தாலும் இருக்கும் இடம் தெரியாமல் அவர் வேலையை மட்டும் செய்து கொண்டு வருபவர் ஆர்ஜே பாலாஜி. இவரிடம் சொல்லிக்கும்படியாக கிட்டத்தட்ட ஐந்து திறமைகள் இருக்கு என்றே சொல்லலாம்.

அதில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது எதுவென்றால் ரேடியோ ஜாக்கி. அதாவது ரேடியோவில் டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதில் இவருடைய சிந்திக்க வைக்கும் பேச்சால் இந்த நிகழ்ச்சியை கேட்பவர்கள் பலரும் முகம் பார்க்காமலேயே இவருக்கு ரசிகர்களாக ஆகிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

Also read: ஆர்ஜே பாலாஜிக்கு இப்படி ஒரு மனைவியா?. 20 வருடத்திற்கு முன் அந்த ஹீரோ மூஞ்ச பார்க்க சகிக்கல

அடுத்ததாக கிரிக்கெட் பற்றிய விஷயங்களை இவருடைய பாணியில் நகைச்சுவை கலந்து வித்தியாசமான முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதில் கூறும் ஒவ்வொரு கமெண்ட்ஸும் கிரிக்கெட் பார்ப்பவர்களை போர் அடிக்காமல் இன்னும் எனர்ஜிட்டியாக பார்ப்பதற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.

இதற்கு அடுத்து சினிமாவில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசவும், இது என்ன மாயம், நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் குணசித்திர கேரக்டரில் நடித்தார். அடுத்து எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டார்.

Also read: பச்சை சட்டைக்கு பிடித்திருந்தால் போதும்.. ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!

அதற்கடுத்து புகழ் என்ற படத்தில் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராகவும் இவருடைய முத்திரையைப் பதித்து விட்டார். அதன் பின் இயக்குனர் பாதையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று இறங்கிய படம் தான் மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம். இந்த இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இப்படி ரேடியோ ஜாக்கி, நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பன்முகத் திறமைகளை வைத்துக்கொண்டு உலக நாயகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உலா வந்து கொண்டிருக்கிறார். அத்துடன் யாராக இருந்தாலும் அவர்களிடம் திறமை இருந்தால் அதற்கேற்ற அங்கீகாரம் தேடி வரும் என்று சொல்வது இவருடைய விஷயத்தில் பொருந்தி வருகிறது.

Also read: தனக்குத்தானே ஆப்பு வைத்த RJ பாலாஜி, யோகி பாபு.. மாறி மாறி உண்மையை உளறிய தெய்வங்கள்

Trending News