வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022ல் திருமணம் செய்த 5 சின்னத்திரை நட்சத்திரங்கள்.. பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி

வெள்ளித்திரை சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு சின்னத்திரை பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வருடம் திருமணம் செய்த 5 சின்னத்திரை பிரபலங்களை பற்றி இங்கு காண்போம். இந்த வருடம் நிறைய பேர் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்தாலும் இந்த ஐந்து ஜோடிகளின் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.

ரவீந்தர் – மகாலட்சுமி இந்த வருடத்தில் நடந்த திருமணங்களிலேயே பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய திருமணம் இவர்களுடையது தான். சின்னத்திரை சீரியல்களில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்தது பலருக்கும் நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுத்தது. அதனாலேயே இவர்களுடைய திருமணம் பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Also read: 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

நவீன் – கண்மணி இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான இவர் செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கண்மணிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இவர்களுடைய திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் நவீன் இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோயினை தான் திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக அவர் கண்மணியை திருமணம் செய்தது ரசிகர்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

புகழ் – பென்சி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய காதலி பென்சியை கடந்த செப்டம்பர் மாதம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

Also read: 2022ல் பரபரப்பை கிளப்பிய 5 பிரபலங்களின் திருமணம்.. 7 வருட காதலில் ஜெயித்த நயன்-விக்கி ஜோடி

ரித்திகா – வினு விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பாலாவுடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக களம் இறங்கினார்கள். இந்நிலையில் ரித்திகா விஜய் டிவியில் பணிபுரியும் வினு என்பவரை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பிரித்விராஜ் – ஷீத்தல் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் பிரித்விராஜ் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். 53 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் அவர் இப்போது ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இந்த விவகாரம் பெரும்ப பரபரப்பை கிளப்பிய நிலையில் பிரித்விராஜ் அதற்கு விளக்கம் கொடுத்து மீடியாக்களின் வாயை அடைத்தார்.

Also read: 2022-ல் அதிகமா பேசப்பட்டு கொடிகட்டிப் பறந்த 6 இயக்குனர்கள்.. மணிரத்தினத்துக்கே சவால் விட்ட இளம் இயக்குனர்

Trending News