வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இளசுகளை கிறங்கடித்த சிம்ரனின் 5 கவர்ச்சி பாடல்கள்.. இன்றுவரை யூட்யூபில் தேடிப் பார்க்கும் நடனம்

இன்று வரை தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை சிம்ரன். பெரும்பாலும் இவரது படங்களில் பாடல்கள் பெரிய அளவில் பேசப்படும். அதில் சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். அவ்வாறு இளசுகளை கிறங்கடித்த சிம்ரனின் 5 கவர்ச்சி பாடல்களை தற்போது பார்க்கலாம்.

எதிரும் புதிரும் : தரணி இயக்கத்தில் வெளியான எதிரும் புதிரும் படத்தில் சிம்ரன் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ஸ்வர்ணலதா குரலில் வெளியான “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடல்தான் அது. தற்போதும் ரசிகர்கள் இந்த பாடலை யூட்யூபில் தேடி பார்க்கின்றனர்.

வாலி : அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வெளியான திரைப்படம் வாலி.“ நிலவை கொண்டு வா, கட்டிலில் கட்டி வை ” என்ற பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடி இருந்தார். இப்படத்திற்கு தேவா இசையமைக்க வைரமுத்து வரிகள் எழுதி இருந்தார். இப்பாடல் அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

அவள் வருவாளா : அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் வருவாளா. இப்படத்திற்காக எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பழனிபாரதி வரிகளில் உன்னி கிருஷ்ணன், சித்ரா குரலில் வெளியான “ சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க ” பாடலில் அஜித் மற்றும் சிம்ரன் நடனமாடி இருந்தனர். தற்போதும் இந்த பாடலை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பூச்சூடவா : அப்பாஸ், சிம்ரன் நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியானது பூச்சூடவா. சிற்பி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் மற்றும் சித்ரா குரலில் வெளியான “ காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் ” என்ற பாடலுக்கு சிம்ரன் கவர்ச்சி நடனமாடி இருந்தார்.

நியூ : எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்த படம் நியூ. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வாலி வரிகளில் உருவான “ஸ்பைடர்மேன்” என்ற பாடலில் சிம்ரன் மற்றும் எஸ்ஜே சூர்யா நடனமாடி இருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது.

Trending News