திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

ரோகினியை காப்பாத்த புதுசாக நுழைந்த 5 கதைகள்.. அரக்கி மாமியாரிடம் சிக்கிய அடிமை மீனா, டம்மியான முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவுக்கு எதிரி வெளியில் மட்டும் இல்லை வீட்டுக்குள்ளேயும் தான் இருக்கிறார்கள். அதில் விஜயாவுக்கு தான் முதல் பரிசை கொடுக்க வேண்டும். தன்னுடைய மகனை நம்பி வீட்டிற்கு வாழ வந்த மருமகளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது. கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதித்த பணமும் கையில் சேரக்கூடாது. கடைசி வரை எனக்கு அடிமையாகவும் வீட்டு வேலைக்காரியாகும் தான் இருக்க வேண்டும் என்று விஜயா ஆசைப்படுகிறார்.

ஆனால் இதையெல்லாம் தாண்டிய மீனா, சுய தொழிலை வைத்து முன்னுக்கு வர வேண்டும் என்று பூ கட்டுவது மூலம் கல்யாண மண்டபத்தில் டெக்ரேசன் செய்து லாபம் பார்த்து வந்தார். இதற்கு எதிரியாக முளைத்த சிந்தாமணி, மீனாவின் மாமியார் விஜயா உடன் கூட்டணி போட்டு மீனா செய்யும் பிசினஸை காலி பண்ண சதி செய்து விட்டார்.

அதாவது மீனாவுக்கு தெரியாமலேயே சிந்தாமணி விரித்த வலையில் சிக்கிவிட்டார். இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது அதன் மூலம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று மீனா சந்தோஷத்தில் இருந்தார். அதனால் கொடுத்த அட்வான்ஸ் பணம் 25,000 மற்றும் கையில் இருந்த பணத்தையும் வைத்து எடுத்த கல்யாண ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டார்.

முடித்துவிட்ட கையோடு மண்டபத்தின் ஓனரிடம் மீதம் கொடுக்க வேண்டிய பணத்தை கேட்கிறார். அதற்கு அவர் மொத்த பணத்தையும் வாங்கின பிறகு தானே நீங்க ஆர்டரையை எடுத்தீங்க. இப்ப என்ன மறுபடியும் பணம் கேட்கிறீங்க என்று மீனாவை ஏமாற்றி மண்டபத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டார். அந்த வகையில் இதற்கு பின்னணியில் இருப்பது சிந்தாமணி தான் என்று மீனா கண்டுபிடித்து விட்டார்.

இதை சாட்சியோடு கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக மீனா சுருதி மற்றும் சீதாவுடன் கூட்டணி போட்டு பிளானில் சிந்தாமணியை சிக்க வைக்கப் போகிறார்கள். இது எதுவும் தெரியாத சிந்தாமணி, விஜயாவுக்கு போன் பண்ணி உங்க மருமகளுக்கு 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை இனி டெக்கரேஷனையே மறந்திட வேண்டியது தான் என்று சொல்லியதும் விஜயா ஓவர் குஷி ஆகிவிட்டார்.

இப்படிப்பட்ட ஒரு அரக்கி மாமியாருக்கு தான் மீனா அடிமை வேலை பார்த்து சிக்கிகொண்டு வருகிறார். இது எதுவும் தெரியாமல் முத்துவும் டம்மியாகத்தான் இருக்கிறார். இதற்கிடையில் ரோகினி செய்யும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே வராமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரோகிணியை காப்பாற்றுவதற்காக தற்போது புதுசாக ஐந்து கதைகள் நுழைந்திருக்கிறது.

அதாவது டிராபிக் போலீஸ் மற்றும் முத்துவுக்கு இடையில் பிரச்சனையை கொண்டு வந்தது. அதே டிராபிக் போலீஸ் மீனாவின் தங்கை சீதாவை காதலித்த வருவது. அடுத்ததாக ரோகிணியின் தோழி வித்தியா மற்றும் முருகன் காதல் ட்ராக். சிந்தாமணியை உள்ளே கொண்டு வந்து மீனா பிசினஸுக்கு எதிரியாக வளர்த்து விட்டது. அத்துடன் ரவி சுருதி மாமியார் இடையில் சண்டையை கொண்டு வந்தது. இதுபோன்ற கதைகளை வைத்து ரோகிணி ரகசியங்கள் மறைக்கப்பட்டு வருகிறது.

Trending News