புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Hit songs: சுசித்ரா பாடிய 5 சூப்பர் ஹிட் பாடல்கள்.. பட்டிதொட்டி எல்லாம் பங்கம் பண்ணும் உயிரின் உயிரே

ஒரு காலத்தில் காலை விடியலே சுசித்ராவின் குரல் தான். 2015 காலகட்டங்களில் சென்னையை கலக்கிக் கொண்டிருந்தவர் சுசித்ரா, ஆர் ஜே வாக அறியப்பட்ட இவர் அதன் பின் தன்னுடைய திறமையை நிலைநிறுத்தி பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். ஆனால் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் உள்ளார். அப்படி சுசித்ரா பாடிய 5 சூப்பர் ஹிட் பாடல்கள்.

போக்கிரி: இந்த படத்தில் “டோலு டோலு” பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை. போக்கிரி படம் விஜய்க்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி அவரது கேரியரில் டர்னிங் பாயிண்ட் கொடுத்தது.

பட்டிதொட்டி எல்லாம் பங்கம் பண்ணும் உயிரின் உயிரே

காக்க காக்க: இன்று வரை இளசுகள் மற்றும் பெருசுகள் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடல் “உயிரின் உயிரே” சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் வெளிவந்த இந்த பாடல் வேர்ல்ட் ஃபேமஸ்.

வாரணம் ஆயிரம்: “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” இன்றைய 2 கே கிட்ஸ் மனதில் எப்பொழுதுமே ஒலித்து கொண்டிருக்கும் பாடல் இது. இந்த பாடலையும் பாடியது சுசித்ரா தான். வயதான பெண்களும் இந்த பாட்டுக்கு அடிமைதான்.

லேசா லேசா: “ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னிடம் கேட்பேன்” பாடல். ஷியாம் நடித்த இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் ஒரு பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தில் திரிஷா காக சுசித்ரா இந்த பாடலை பாடியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

ஜில்லுனு ஒரு காதல்: 2006 ஆம் ஆண்டு சூர்யா மட்டும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் “ஜில்லுனு ஒரு காதல்” இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. படத்தில் ஜில்லெனு ஒரு காதல் என்ற பாடலை சுசித்ரா தான் பாடியுள்ளார். இப்போ வரை இந்த பாட்டை கேட்கும் போது ஜில்லென்று ஒரு காற்று வீசும்.

Trending News