வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெற்றிமாறனின் ஆச்சரியமூட்டும் 5 அவதாரங்கள்.. வெப் சீரிஸ்க்கு கதை எழுதிய பொல்லாதவன்

அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் விடுதலை. உண்மை கதையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நேர்மறை விமர்சனத்தை பெற்று தந்தது. அவ்வாறு சினிமா மீது கொண்ட ஆர்வத்தை இவர் பல பரிமாணங்களில் வெளிக்காட்டி வருகிறார்.

தன் திறமையின் வாயிலாக சினிமாவில் பல அவதாரங்களிலும் அடையாளத்தை பதித்து வருகிறார் வெற்றிமாறன். மேலும் இவரின் சாதனையாக பார்க்கையில் பல விருதுகளை வென்று இருக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க இவரின் அவதாரங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை கொடுத்த குமரேசன்

இயக்குனர்: 2007ல் தனுஷின் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தை இயக்கியவர் வெற்றிமாறன். அதன் பின்பு இவர் இயக்கிய படங்கள் ஏராளம். அதிலும் ஆடுகளம் படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை பெற்று தந்தது. இவர் பெரும்பாலும் தனுஷை வைத்து எடுத்தப் படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தயாரிப்பாளர்: இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாது தயாரிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை இவருக்கு நல்ல வசூலை பெற்று தந்தது. மேலும் இவருக்கு படங்களை தயாரிக்கும் ஆசையை தூண்டும் விதமாக இப்படம் அமைந்தது. அதன்பின் தனுஷின் படமான வடசென்னை இவரின் தயாரிப்பில் வெளிவந்து விருதுகளை பெற்று தந்தது.

Also Read: வடசென்னை படத்திற்கு சிம்புவுக்கு முன்னாடியே தேர்வான ஹீரோ.. வெற்றிமாறன் செய்த ராஜதந்திரம்

கதை ஆசிரியர்: தனக்கு கிடைக்கும் அனுபவத்தின் மூலம் கதை எழுதும் ஆர்வம் கொண்டவர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் இவர் எழுதிய கதைகள் கருத்துள்ளதாக அமைந்திருக்கும். மேலும் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இவர் எழுதி இருக்கிறார். அதைத்தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் இவரின் கதையில் வெளிவந்து வெற்றி கண்டது.

கவிதை எழுதுபவர்: தான் எழுதும் கதையாக இருந்தாலும் மற்றும் கவிதையாக இருந்தாலும் அவற்றை சிந்திக்கும் தன்மையில் எழுதுபவர் வெற்றிமாறன். மேலும் இவரின் சிந்தனை ஆற்றலால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் அமீர் வெப் சீரிஸ் கதைகளை எழுதி தருமாறு கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் வெப் சீரிஸ் கதைகளை உருவாக்குவது என்பது எளிதல்ல என கூறியிருக்கிறார். அதிலும் ஒரு டெடிகேஷன் இருந்தால்தான் சாதிக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார்.

Also Read: வெற்றிமாறனிடம் இருந்த கெட்ட பழக்கம்.. தெரியாமல் மாட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட ஆண்ட்ரியா

விவசாயி: விவசாயம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு எளிதான ஒரு விஷயம் அல்ல. அவ்வாறு இருப்பின் தான் வளர்ந்த சூழலுக்கேற்ப இயற்கை சார்ந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தன் சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வாராம். மேலும் சினிமாவில் ஏற்படும் மன உளைச்சலை மேற்கொள்ள விவசாயத்தை கையாண்டு வருகிறார் வெற்றிமாறன்.

Trending News