திரைப்படங்களை பொருத்தவரைக்கும் எந்த கதை வெற்றி பெறும், எது வெற்றி பெறாது என முன்னணி நடிகர்களாலேயே கணிக்க முடியாது. இதனால் எதிர்பார்த்து தோல்வியை கண்ட படங்களும் உண்டு. அதே போல் எதிர்பாராத வெற்றியை கண்ட படங்களும் உண்டு. இது போன்ற பிரச்சினை ஆளையே நிறைய ஹிட் படங்களை பெரிய ஹீரோக்கள் தவற விட்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட ஐந்து தமிழ் ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
பிரசாந்த் – மின்னலே: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் மற்றும் ரீமாசென் நடித்த திரைப்படம் மின்னலே. இந்த படத்தின் வாய்ப்பு முதன் முதலில் பிரசாந்திற்கு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் டாப் ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தின் நடிக்க மறுத்துவிட்டார். அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு கொஞ்சம் டல் அடித்த மாதவனின் சினிமா வாழ்க்கை மீண்டும் உச்சமடைய மின்னலே திரைப்படமும் ஒரு முக்கிய காரணம்.
Also Read:தந்திரமாய் செயல்படும் வெங்கட் பிரபு, விஜய்.. முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க போடும் திட்டம்
முரளி – பூவே உனக்காக: தளபதி விஜய் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும் அவருக்கு சினிமாவில் ஒரு ஹீரோவாக அந்தஸ்தை வாங்கி கொடுத்த திரைப்படம் என்றால் அது விக்ரமனின் பூவே உனக்காக தான். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது முரளி. அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் விஜயின் சினிமா வாழ்க்கையே ஒரு மிகப் பெரிய திருப்பத்தை கண்டது.
தனுஷ் – விண்ணைத்தாண்டி வருவாயா: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்திய திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான். அவர் மறுத்ததால் சிம்புவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களாக வெற்றி படங்கள் எதுவுமே இல்லாமல் இருந்த சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Also Read:47 படம் நடிச்சும் பிரயோஜனம் இல்ல.. குழந்தையிலிருந்து நடித்து 6 ஹிட் மட்டுமே கொடுத்த சிம்பு
பார்த்திபன் – ஜிகர்தண்டா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தில் அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹா மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். ஆனால் இந்த வாய்ப்பு முதன்முதலில் நடிகர் பார்த்திபனுக்கு தான் கிடைத்திருக்கிறது. அவர் நடிக்க மறுத்ததால் தான் பாபி சிம்ஹா இந்த கேரக்டரில் நடித்தார்.
மிர்ச்சி சிவா – நானும் ரவுடிதான்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த படத்தின் கதையில் முதலில் நடிப்பதற்கு எந்த ஹீரோவும் ஒத்துக் கொள்ளவில்லை என விக்னேஷ் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அப்படி இந்த கதையை மறுத்த நடிகர்களில் மிர்ச்சி சிவாவும் ஒருத்தர். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே இந்த திரைப்படத்தில் நடித்தார். ஆனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.