செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

காதலித்தவர்களை அசால்ட்டாக கழட்டிவிட்ட 5 தமிழ் நடிகைகள்.. நம்பர் 1 லிஸ்டில் இருக்கும் புன்னகை இளவரசி

நடிகைகள் என்றாலே வதந்திகள், கிசுகிசுக்கள் அவர்களை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி சினிமாவில் வெற்றி பெற்று தங்களது வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள். இருந்தாலும் சில நடிகைகள் தங்களை உயிருக்கு உயிராக காதலித்தவர்களை கழட்டிவிட்டு, பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஜம்முனு செட்டிலாகி உள்ளனர். அப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

சினேகா : நடிகை சினேகா 2000 ஆண்டிலிருந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து புன்னகை இளவரசியாக தற்போது வரை வளம் வருபவர். இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷாம், மாதவன் உள்ளிட்டோர் அவர் மீது காதல் வயப்பட்டனர் என்றெல்லாம் கதைகள் உள்ளது. மேலும் சினேகாவின் முதல் பட இயக்குனர் சினேகாவை திருமணம் செய்யும் அளவிற்கு அவரை காதலித்து வருவதாக பேச்சுகள் உண்டு. ஆனால் நடிகை சினேகா அனைத்தையும் கடந்து 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஜம்முனு வாழ்ந்து வருகிறார்.

Also Read : படு கிளாமரான நீச்சல் உடையில் சினேகா.. இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்

சிம்ரன்: நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான சிம்ரன், அஜித், விஜய், கமலஹாசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். 90 ஸ் ஹிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகையான சிம்ரன், உலக நாயகன் கமலஹாசனுடன் லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்து வருவதாக பல பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் அவருடன் காதலில் இருந்து வந்தார் பின்னர் பிரிந்தார். ஆனால் நடிகை சிம்ரன் இந்த சர்ச்சையெல்லாம் மூட்டை கட்டி விட்டு தனது சிறுவயதிலிருந்து நண்பரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

நமீதா: கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நமீதா பல சர்ச்சைக்குள்ளான நடிகையாக வலம் வந்தவர். ஏய் என்ற திரைப்படத்தில் சரத்குமாருடன் நடித்த நமீதா, சரத்குமாருக்கு தற்போது வரை பிடித்த நடிகையாக வலம் வருகிறார். விஜய், அஜீத் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த நமீதா, அவர் நடிக்கும் அனைத்து நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான வீரேந்திரா சௌத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது இரட்டை குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

Also Read : உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

நயன்தாரா : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நிலையில், நடிகர் சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் நடித்தார். அதிலிருந்து இருவரும் காதலித்து வருகின்றனர் என்று புரளி கிளம்பி திடீர் திருப்பமாக இயக்குனர் பிரபுதேவாவுடன் நயன்தாரா காதலித்து திருமணம் செய்ய முயன்று நடக்காமல் பின்னர் பிரிந்தனர். பல வருடங்களுக்குப் பின்னர் இந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குஷ்பூ : நடிகை குஷ்பூ 90 களில் கனவு கன்னியாக வளம் வந்த நிலையில், ஆரம்பத்தில் நடிகர் பிரபுவின் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார். நடிகர் பிரபுவும், குஷ்புவும் ஒன்றாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாகவும், அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிரபுவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இதனிடையே இயக்குனர் சுந்தர்.சி யை மணம் முடித்துக் கொண்டு தற்போது குஷ்பூ ஜம்முனு வாழ்ந்து வருகிறார்

Also Read : இரண்டாவது திருமணம்.. கணவரின் அனுமதிக்காக காத்திருக்கும் குஷ்பூ.!

Trending News