வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நம்ம சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் 5 இயக்குனர்கள்.. பாலிவுட் ஹீரோக்களை டீலில் விடும் லோகேஷ்

Top 5 Directors in Kollywood: தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலமான இயக்குனர்கள் தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும், திடீரென ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அறிமுக இயக்குனர்கள் யாராவது சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விடுவார்கள். அப்படி இந்த ஐந்து இயக்குனர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதில் முக்கிய பங்காக இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் பணிபுரிய ஒட்டுமொத்த சினிமா உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

லோகேஷ் கனகராஜ்: மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தன்னுடைய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அடுத்த படமே இவருக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: விஜய்க்காக காத்திருக்கும் ரகடான இயக்குனர்.. லோகேஷை ஓவர்டேக் செய்ய தயாராகும் ஸ்கிரிப்ட்

சுதா கொங்கரா: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தன் பணியை தொடங்கிய சுதா கொங்கரா, தமிழில் முதன் முதலில் நடிகர் மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து இறுதி சுற்று என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பின்னர் இவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் இவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது மட்டுமல்லாமல், நடிகர் சூர்யாவை உலக சினிமா அரங்கிற்கே கொண்டு சென்றது எனலாம்.

வெற்றிமாறன் : இயக்குனர் வெற்றிமாறன் என்றாலே தமிழ் சினிமாவில் தேசிய விருது இயக்குனர் என்று அடையாளமாக சொல்லப்படுபவர். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பேசப்படும். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் இரண்டாம் பாகத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:சொதப்பிய நெல்சன், சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. லியோவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

புஷ்கர் காயத்ரி: தமிழில் ஓரம்போ மற்றும் வா குவாட்டர் கட்டிங் படங்களை இயக்கிய ஜோடி இயக்குனர்கள் தான் புஷ்கர் காயத்ரி. இவர்களது இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதுபோன்ற பல கதைகள் இவர்கள் தரப்பில் இருந்து வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ரவிக்குமார்: தமிழ் சினிமாவில் இன்று நேற்று நாளை என்னும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி அடைந்தவர் தான் இயக்குனர் ரவிக்குமார். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமும் சயின்ஸ் பிக்சன் கதை காலத்தைக் கொண்டது. இவர் மூலம் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:தலைவரை சுத்தலில் விடும் லோகேஷ்.. பாகுபலி ரேஞ்சுக்கு கொடுக்கும் பில்டப்

Trending News