புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மூன்று திருமணம் செய்து உல்லாசமாக வாழ்ந்த 5 நடிகர்கள்.. காதல் மன்னனை பார்த்து பொறாமையில் பொங்கிய திரையுலகம்

Tamil Heroes: பொதுவாகவே சினிமாவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது சாதாரண விஷயமாகும். அப்படி உல்லாசமாக மூன்று திருமணங்களை செய்து கொண்டு, மன்மதனாக ராஜா வாழ்க்கை வாழ்ந்த ஐந்து ஹீரோக்கள் யார்? அவர்களின் முத்தான மனைவிகள் யார் என்பதையும் பார்ப்போம்.

எம்ஜிஆர்: தமிழ் சினிமாவின் முன்னோடியாக இருந்தவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என ரசிகர்களின் மனதில் நிற்குமாறு தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கு 1938ல் சித்திரை குளம் பார்கவி உடன் திருமணம் நடந்தது. பிறகு சத்தியவதி என்பவரை 1944ல் மணந்தார், சுமார் 30 ஆண்டு காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திரை உலக சாதனைகளுக்கும் அரசியல் ரீதியாக ஏற்படும் குழப்பங்களுக்கும் உறுதுணையாக இருந்தவர். 1963ல் வி.என் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read:Are U Ok Baby Movie Review – பணமா, பாசமா? அபிராமி-சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியுள்ள ஆர் யூ ஓகே பேபி, முழு விமர்சனம்

ஜெமினிகணேசன்: காதல் மன்னன் ஜெமினி கணேசன் தனது சொந்த வாழ்க்கையிலும் பிளேபாயாகவே இருந்திருக்கிறார். 1940ல் அலமேலுவுடன் திருமணம் ஆனது, இவர்களுக்கு நாலு குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையிலே 1954இல் புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். 1955இல் சாவித்திரியை திருமணம் செய்தார். சாவித்ரி மறைந்த பிறகு கடைசி காலத்தில் கூட ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்தார்.

எஸ் எஸ் ராஜேந்திரன்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு முகங்களை கொண்டவர் ராஜேந்திரன். 1950 முதல் 1980 வரையிலும் இவர் மூன்று திருமணங்களை செய்திருக்கிறார். முதல் மனைவி அலமேலு, இவர்களுக்கிடையே ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இரண்டாவது மனைவி ஜானகி தேவி, மூன்றாவது மனைவி பங்கஜம் ஆவார்.

Also Read:எம்ஜிஆர்க்காக உயிரைக் கொடுக்க ரெடியாக இருந்த 5 பாடிகாட்ஸ்.. புரட்சித் தலைவரின் வெற்றிக்கு இவங்களும் காரணம்

கண்ணதாசன்: கண்ணதாசன் கவிதைகள்,பாடல்கள் எழுதுவதில் வல்லவர். இவர் வாழ்க்கையில் எழுதிய அழகிய வரிகள் மூன்று முத்தான மாணவிகள் ஆகும். தனலட்சுமி முதல் மனைவி, இவர்களுக்கிடையே இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். பிறகு கமலா இரண்டாவது மனைவி, மீனா மூன்றாவது துணைவி.

கமல்ஹாசன்: தனது தனித்துவமான நடிப்பினால் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் திரைப்படம் நடிப்பதிலும் ரொமான்டிக் கதைகளில் நடிப்பதில் ஜெமினி கணேசன் அடுத்து இவரை மிஞ்ச யாரும் இல்லை. முதல் மனைவி வாணி கணபதி 1978 திருமணமானது, 10 வருடத்துக்குள்ளேயே 1988ல் முடிவுக்கு வந்தது. சரிகா தாகூர் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதிஹாசன், அக்ஷர ஹாசன் என்று இரண்டு மகள்களும் இருக்கின்றனர். 2004 இல் அதுவும் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கௌதமியுடன் 2004 முதல் 2016 வரை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

Also Read:5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

Trending News