வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கலைஞர் விழாவில் நடந்த தப்புக்கு காரணமான 5 விஷயங்கள்.. இதுவரை பார்க்காத அவமானத்தை சந்தித்த ரஜினி

Kalaingar 100th Programme Participating Rajini: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 6ம் தேதி நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தின் சார்பாக ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் இந்த விழாவிற்கு தமிழக கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலுக்கு நேரடியாக பத்திரிக்கை கொடுத்து அழைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் மூத்த நடிகர்கள் என்பதால் இவர்களை கௌரவிக்கும் விதமாக ரஜினி கமல் பெயர்களை பத்திரிகையில் போட்டு கூப்பிட்டு இருக்கிறார்கள். அதே மாதிரி மற்ற அனைத்து கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பிரமாண்டத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்தும் தவிடு பொடியாகி போய்விட்டது.

அந்த வகையில் கலைஞர் விழாவில் பல சொதப்பல்கள் நடந்திருக்கிறது. இதற்கு காரணமான ஐந்து விஷயங்களை தற்போது பார்க்கலாம். முறைப்படி நிகழ்ச்சியை சரியாக வழி நடத்தவில்லை, அத்துடன் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவர்கள் இதை முறைப்படி கொண்டு போகவில்லை.

Also read: விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

மேலும் வருகிற பொங்கலுக்கு இந்த நிகழ்ச்சியை டிவியில் எப்படியாவது ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர அவசரமாக நடத்தி இருக்கிறார்கள். இதனை அடுத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போக வேண்டும் என்பதற்காக எந்த ஒரு முயற்சியும் அவர்கள் யாருமே செய்யவில்லை. அடுத்து நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு ரொம்ப தாமதமாக ஆக்கிக் கொண்டார்கள்.

இதனால் பொதுமக்கள் ரொம்பவே கடுப்பானதால் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னே ஒவ்வொருவரும் வெளியே போக ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக ரஜினி மற்றும் கமல் பெயரை மட்டும் பத்திரிக்கையில் போட்டுவிட்டு அஜித், விஜய் பெயர்களை போடாமல் அவமதித்ததற்காக ரசிகர்கள் யாருமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அதனாலயே முக்கால்வாசி நடிகர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு கலந்து கொள்ள வரவில்லை. இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி அங்கே மேடை ஏறி பேசிய பொழுது விழாவே வெறுச்சோடி இருந்திருக்கிறது. இதை பார்த்த ரஜினிக்கு மிகவும் அவமானமாக இருந்திருக்கிறது. இதுவரை இப்படி ஒரு அவமானத்தை அவருடைய வாழ்க்கையில் சந்தித்து இருக்கவே மாட்டார். அந்த அளவிற்கு ரஜினி அசிங்கப்பட்டு திரும்பி வந்திருக்கிறார்.

Also read: நட்புக்குள் ஏற்பட்ட பிளவு.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு டாட்டா போட்ட விஷால்

Trending News