வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக் பாஸ் சீசன் 7ல் நடந்த எதிர்பாராத 5 நிகழ்வுகள்.. மொத்த சீசனையும் புரட்டி போட்ட அந்த தருணம்

BB7 Tamil: விஜய் டிவியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன் களில் இந்த ஏழாவது சீசன் தான் ரொம்ப மோசம் என இதுவரை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை இறுதிவரை பார்த்ததற்கான முக்கிய காரணம் யாருக்கு டைட்டில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக மட்டும் தான். இறுதியில் மக்களின் தீர்ப்பாகவே அர்ச்சனா டைட்டிலை வென்றார். இந்த சீசனில் யாருமே எதிர்பார்க்காத ஐந்து ட்விஸ்ட்கள் நடந்ததை மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கலாம்.

பவா செல்லத்துரை எவிக்சன்: இந்த சீசனின் மொத்த தலையெழுத்தையும் மாற்றியவர் என்ற பெருமை பவா செல்லத்துரைக்கு தான் இருக்கிறது. இரண்டாவது வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டிய மாயாவை, தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி காப்பாற்றி மொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டார். ஒருவேளை அந்த வாரம் மாயா எவிக்ட் ஆகி இருந்தால் கண்டிப்பாக பிரதீப் ஆண்டனி ஆட்டத்தை தொடர்ந்திருப்பார்.

சரவண விக்ரம்: இந்த சீசனில் வாயையே திறக்காமல் எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொண்டிருப்பது சரவண விக்ரம் தான். இப்படி ஒரு கேரக்டர் பிக் பாஸ் வீட்டில் 80 நாட்கள் எப்படி இருந்தது என்று தான் இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. எப்போதுமே கன்டென்ட் கொடுக்காத போட்டியாளர்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது கண்டன்டும் கொடுக்காத, சுயமரியாதையும் இல்லாத சரவண விக்ரம் எப்படி இவ்வளவு நாள் உள்ளே தாக்கு பிடித்தார் என்று தெரியவில்லை.

Also Read:வாழ்க்கை வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு.. அர்ச்சனாவிற்கு திடீர் ட்விட் செய்த மாயா

ரெட் கார்டு: பிக் பாஸ் சீசன் 7 என்றால் காலத்திற்கும் ஞாபகத்திற்கு வரப்போற விஷயம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தான். அவருக்கு ரெட் கார்டு கொடுத்த எந்த ஒரு போட்டியாளர்களும் இன்று வரை வெளியில் வந்து நியாயமான காரணம் எதையுமே சொல்லவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களிலேயே இவர் தான் டைட்டில் வின்னர் என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

மொத்த சீசனையும் புரட்டி போட்ட அந்த தருணம்

அர்ச்சனா: அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்த போது அவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருக்கும் அர்ச்சனா மக்களின் கணிப்பு படி 10, 20 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறி இருப்பார். ஆனால் தன்னை எதிர்த்து நின்ற அத்தனை பேரையும் கதறவிட்ட தருணம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மொத்த ஆட்டத்தையும் புரட்டி போட்டது.

மணி சந்திரா: பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஆரம்பத்தில் இருந்தே மக்களால் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்தவர் மணி. கடைசி இரண்டு மூன்று வாரங்களில் அவருக்கு ஓட்டுக்கள் குவிந்த விதம் இன்று வரை நம்ப முடியவில்லை. மணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடைசிவரை தன்னுடைய கேரக்டரை மாற்றாமல் இருந்து மணி ஜெயித்துக் காட்டியிருக்கிறார்.

Also Read:விரக்தியில் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் பிக் பாஸ் மாயா.. இன்ஸ்டா-வில் போட்ட பதிவு

Trending News