சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மார்க்கெட்டை தக்க வைக்க அடுத்தடுத்து வரவிருக்கும் ரஜினியின் 5 படங்கள்.. இளம் இயக்குனருடன் மல்லுக்கட்ட போகும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இதனால் தொடர்ந்து ரஜினியின் சம்பளம் அடுத்தடுத்து படங்களுக்கு குறைந்து கொண்டே போகிறது. ஆகையால் மார்க்கெட்டை தக்க வைக்க  இளம் இயக்குனர்களுடன் ரஜினி மல்லுக்கட்ட இருக்கிறார்.

இப்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

Also Read : அதர்வாவை அடித்து துரத்திய ஐஸ்வர்யா.. 2 கிரிக்கெட் வீரர்களுடன் களம் இறங்கும் சூப்பர் ஸ்டார்

லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது ரஜினியின் 170 ஆவது படமாக அமைய உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இளம் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி கதையில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் அறிமுகமான சிபிச் சக்கரவர்த்தி இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது. அடுத்ததாக ரஜினி மணிரத்தினம் படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read : 50 வருடங்களில் பார்க்காத வித்தியாசமான கதைக்களம்.. மிரளவைத்த நடிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி

பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை பிரம்மாண்ட படைப்பாக கொடுத்துள்ள மணிரத்தினம் அடுத்ததாக ரஜினியை வைத்து தளபதி போன்ற கதைய அம்சத்தை கொண்டு ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்ததாக ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளார். தற்போது தளபதி 67 படத்தை இயக்க உள்ள லோகேஷ் அடுத்ததாக கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் 173 படம் லோகேஷ் இயக்கம் படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு 2,3 வருடங்களுக்கு அடுத்தடுத்து 5 படங்களில் கமிட்டாகி ரஜினி படு பிஸியாக உள்ளார்.

Also Read : ரஜினிக்கே மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்.. மறக்கமுடியாத பி.வாசு-வின் 5 வெற்றி படங்கள்

Trending News