5 Upcoming Movies Which Have Use AI Tech: சமீபத்திய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை சமூக வலைத்தளத்திலும், சினிமாவிலும் மற்ற பிரபலமான துறைகளிலும் ஏற்படுத்தி வருகிறது. டெக்னாலஜிக்கு ஏற்ப சினிமாவும் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் 5 படங்கள்
இந்தியன் 2: கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் ரிலீசான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் இப்போது எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான சில காட்சிகளுக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உலக நாயகன் கமலஹாசன் அமெரிக்கா கூட சென்றிருந்தார். AI தொழில் பயன்படுத்தி இந்த காட்சிகளை மாற்றுவதனால் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
GOAT: GOAT படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகி வரும் கதை. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கேரக்டர் ரொம்பவும் இளம் வயது தோற்றம் கொண்டதாக காட்டப்படுகிறது. விஜய்யை இளமையாக காட்ட டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
Also Read:வானிலே வட்டமிட்டு கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார்.. லோகேஷ்-க்கு தலைவர் போட்ட ஸ்டிட் கண்டிஷன்
தலைவர் 171: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் அவருடைய 171 வது படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. லால் சலாம், வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி இந்த படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்ளுவார். இந்த படத்தின் கதைக்காக ரஜினியை இளம் வயது ரஜினி ஆக, அதிலும் குறிப்பிட்டு தளபதி படத்தில் இருந்த ரஜினி ஆக காட்டுவதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார்கள்.
தக் லைஃப்: கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாக இருக்கும் படம்தான் தக் லைஃப். இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆதிக்கம் இருந்தபோது இருந்த தக் என்னும் கூட்டத்தினரை சார்ந்த கதையாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்தியா என்பதால் இந்த படத்தின் காட்சிகளுக்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, பிக் பாஸ் ஆரவ், ரெஜினாஆகியோர் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு பயங்கர பிசியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் திரைப்பதை ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என ஏற்கனவே படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பி விட்டது. விடாமுயற்சி படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் இளம் வயது அஜித்தை காட்ட இருக்கிறார்கள். இதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Also Read:திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி