ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தலைவர் 171 படத்திற்காக வலை விரிக்கப்பட்ட 5 வில்லன்கள்.. வாண்டட் லிஸ்டில் இருக்கும் நடிகவேள்

Thalaivar 171: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை பொருத்தவரைக்கும் அவருடைய படத்தில் ஹீரோ யார் என்பதை விட, வில்லன் யார் என்ற ஆர்வம் தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்காக 5 பேருக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

ஐந்து வில்லன்கள்

லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர். சமீபத்தில் அவருடைய மிகப்பெரிய வெற்றி பணமா சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கூட நடித்திருந்தார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில், விஜய் சேதுபதியின் கேரக்டரை பண்ண வேண்டியது அவர்தான். ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்கவில்லை. இந்த படத்திற்கு லோகேஷ், ராகவா லாரன்சை நடிக்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா: சமீபத்தில் நிறைய நடிகர்கள் தங்களுடைய படங்களில் எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். அதிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் அவரை ரொம்பவே அதிகமாக பாராட்டியதோடு, இன்றைய சினிமாவின் நடிகை வேள் என்று சொல்லி இருந்தார். ரஜினியும், எஸ் ஜே சூர்யாவுடன் நடிக்க ஆசைப்பட்டு அவருடைய படத்தில் புக் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.

பகத் பாசில்: சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேல் என்னும் கேரக்டரில் மிரட்டியிருந்தார். மேலும் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அமர் என்னும் கேரக்டரில் இவர் நடித்தது மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது. இதனால் லோகேஷ் தன்னுடைய அடுத்த படமான தலைவர் 171லும் பகத் பாசிலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் பெரிய ஹிட் அடித்து வருகிறது. ஏற்கனவே அவர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் மிரட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து தலைவர் 171 படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அருண் விஜய்: பல வருடங்களாக சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருந்த அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வித்தியாசமான கதை களங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் அருண் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. கண்டிப்பாக அது தலைவர் 171 படம் ஆகவும் இருக்கலாம்.

Trending News