வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நாளைக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் 5 வைல்டு கார்டு என்ட்ரி.. விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர்

bigg boss 5 wild card entry: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி இருக்கிறது. ஆனாலும் இன்னும்வரை சூடு பிடிக்காமல் மந்தமாகவே போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு வகையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் காரணமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை புதிதாக தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் எதார்த்தமான பேச்சும் சில சரிவுகளை சந்தித்து இருக்கிறது.

என்னதான் பிக் பாஸை தொகுத்து வழங்கும் பொழுது கமல் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்திருந்தாலும், இவருக்கு ஈடு இணையாக தொகுத்து யாராலும் வழங்க முடியாது என்பதற்கு ஏற்ப கமல் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விஜய் டிவி பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறது.

அந்த வகையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை வைத்து இனி ஒன்னும் பண்ண முடியாது. அதற்கு பதிலாக புதிதாக ஐந்து போட்டியாளர்களை உள்ள அனுப்பலாம் என்று வைல்டு கார்டு மூலம் அனுப்பப் போகிறார்கள். எப்போதுமே வைல்டு கார்டு மூலம் போகும் போட்டியாளர்கள் ஏற்கனவே வெளியே இருந்து சில போட்டியாளர்களையும் கருத்துகளையும் பார்த்துட்டு போவதால் எதிர்பார்க்காத திருப்பங்களும் சண்டைகளும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பிக்பாஸ் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக இந்த முறை 5 போட்டியாளர்கள் உள்ளே போகப் போகிறார்கள். அந்த வகையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக விஜய் டிவி மூலம் பிரபலமான டிஎஸ்கே. இவர் விஜய் சேதுபதியின் மிக நெருங்கிய நண்பர் மற்றும் சில படங்களில் கூடவே நடித்திருக்கிறார். அடுத்ததாக சிவாஜி கணேசனின் பேரன், சுஜா வருணனின் கணவரும் மற்றும் நடிகருமான சிவக்குமார்.

இவர்களை தொடர்ந்து நடிகரும் மாடலுமான ராணவ், அடுத்ததாக முத்துக்குமாரனுக்கு சவாலாக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, மாடலிங் கேட்டகிரியில் சௌந்தர்யாவுக்கு போட்டியாக வர்ஷினி வெங்கட் என்பவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகிறார். இந்த ஐந்து போட்டியாளர்கள் மூலம் ஏதாவது திருப்புமுனையும் சுவாரசியமும் ஏற்பட போகுதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News