திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் 5 ஆசைகள்.. பணத்தாசை இல்லாதவரை பதவிக்காக வீழ்த்திய நரிக்கூட்டம்

Vijayakanth’s unfulfilled 5 Wishes: சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்த அவருக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இப்போது கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒரு மனிதன் எந்த அளவுக்கு நல்லவனாய் வாழ்ந்திருந்தால் இந்த அளவுக்கு நாடே கதறும் என்பது கேப்டன் விஷயத்தில் தெளிவாகத் தெரிகிறது. எம்ஜிஆருக்கு பிறகு இந்த கருப்பு எம்ஜிஆரின் மறைவு தான் தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. அப்படிப்பட்ட கேப்டனின் நிறைவேறாத ஐந்து ஆசைகள் பற்றி பார்ப்போம்.

விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரையும் தன்னைப் போலவே ஒரு பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. அதே போல் இரண்டு மகன்களின் திருமணத்தை பார்க்காமலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்.

Also read: இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நன்றி கெட்ட நடிகர்.. செய்நன்றி மறந்தால் இப்படித்தான்

மூன்றாவதாக ஏழை மக்களின் நலனுக்காக தான் தேமுதிக கட்சியை அவர் உருவாக்கினார். ஆனால் அந்தக் கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்காமல் போனது. நான்காவது, எம்ஜிஆர் போல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை.

ஐந்தாவதாக பணத்தை பெரிதாக நினைக்காமல் அனைவருக்கும் வாரி வழங்கி வந்தார். அதேபோல் ஏழை மக்களுக்காக பல திட்டங்களையும் செயல்படுத்த நினைத்தார். ஆனால் அவரை சுற்றி இருந்த நரி கூட்டத்தினரால் அவர் வீழ்ச்சி அடைந்தது ஊருக்கே தெரியும்.

பணத்தாசை இல்லாதவரை பதவி ஆசைக்காக சுற்றி இருந்தவர்களே வீழ்த்தி விட்டனர். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட அவருடைய நிலையை பார்த்து கண்ணீர் வடிக்காத மக்களே கிடையாது. ஆக மொத்தம் ஒரு நல்ல தலைவனை இப்போது தமிழகம் இழந்து நிற்கிறது.

Also read: செல்லப் பிள்ளையாய் இருந்த விஜயகாந்த் கலைஞரை எதிர்த்த காரணம்.. சிஸ்டம் சரியில்ல என ஒதுங்கிய ரஜினி

Trending News