வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வரிசையாக கதை கேட்கும் ரஜினிகாந்த்.. அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் 5 இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் அடுத்த படத்திற்கான கதையையும் கேட்கத் தொடங்கி விட்டார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரை இயக்க அடுத்தடுத்து ஐந்து இளம் இயக்குனர்கள் தயாராக இருக்கின்றனர்.

சிபி சக்கரவர்த்தி: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சிபிச் சக்கரவர்த்தி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டார் இவர். இவர்தான் அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வரவில்லை.

Also Read: தோல்வி பயத்தில் ரஜினி, வரிசை கட்டும் இத்தனை பேர் .. நீண்டு கொண்டே போகும் இயக்குனர்கள் பட்டியல்

பிரதீப் ரங்கநாதன்: கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகின் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய லவ் டுடே திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் திரைப்படம் ஆக ஆனது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இவரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் . பிரதீப் ரங்கநாதனும் ரஜினிக்கு கதை சொல்லி இருக்கிறார்.

பி வாசு: 90களின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் தான் பி வாசு. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு போன்ற டாப் ஸ்டார்களுக்கு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். பாபா திரைப்படத்திற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று திணறிக் கொண்டிருந்த ரஜினிக்கு சந்திரமுகி என்னும் வெற்றி படத்தை கொடுத்தவர். தற்போது இவரும் ரஜினிக்கு கதை சொல்லி இருக்கிறார்.

Also Read: பக்கா பான் இந்தியா மூவி என நிரூபித்த நெல்சன்.. நான்கு ஸ்டேட்களில் இருந்து வரும் 4 டாப் ஸ்டார்கள்

‘ஜெய் பீம்’ ஞானவேல்: நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெய் பீம். நடிகர் சூர்யாவுக்கு சூரரைப் போற்று திரைபடத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது இந்தப் படம். இந்த படத்தை இயக்கியவர் தான் ஞானவேல் தற்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கும் கதை சொல்லியிருக்கிறார்.

முத்தைய்யா: நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன், விருமன் போன்ற படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் முத்தைய்யா. இவர் தான் தேவராட்டம் படத்தையும் இயக்கியவர். அதிகமாக தென் தமிழகத்தை மைய்யமாக கொண்டே இவர் படம் எடுப்பார். தற்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கு கதை சொன்ன இயக்குனர்களின் வரிசையில் இருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் காதுக்கு போன விஷயம்.. ஜெயிலர் படத்தால் பரிதவிக்கும் நெல்சன்

Trending News