5 young heroes who are rising unexpectedly in Tamil cinema: நெப்போடிஸம் நிறைந்த துறையில் சினிமாவும் ஒன்று. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சினிமாவில் வெறிகொண்டு வாய்ப்பு தேடி வரும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சிலர் சின்னத்திரை மூலமாகவும் குறும்படங்களின் மூலமாகவும் திடீரென தடாலடியாக வெள்ளித்திரையினுள் நுழைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
கவின்: டாடா படத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திய கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் நாடக நடிகராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இன்றோ முன்னணி இயக்குனர்கள் இவரது கால்ஷிட்காக வரிசை கட்டி நிற்கின்றனர். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கியவர் இன்று நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கிறார்.
சந்தானம்: விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் சினிமாவில் அறிமுகமான சந்தானம், காமெடியனாக ஆரம்பித்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் உச்சம் பெற்று உள்ளார். இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று பிகு பண்ணும் சந்தானம் தனக்கென ஒரு கூட்டணி அமைத்து, காமெடி படங்களை தயாரித்து நடித்து வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன்: குறும்படங்கள் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதிப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகனாக அறிமுகமாகி லவ் டுடே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கினார். மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் தனது மார்க்கெட்டை உயர்த்திய போதும் தயாரிப்பாளர்கள் இவரை விட மறுக்கின்றனர்.
சூரி: பரோட்டா சாப்பிட்டதன் மூலம் பேமஸான சூரி, ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் வந்தாலும் வெண்ணிலா கபடி குழு மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமாக அறியப்பட்டார். தொடர்ந்து காமெடி டிராக்கை பயன்படுத்தி வந்தவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இன்று ஏழு கடல் ஏழு மலை, கொட்டு காளி போன்ற படங்களின் மூலம் சர்வதேச விழாவில் பங்கேற்று தமிழனுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
ரியோ: சன் மியூசிக் VJ வாக தனது கேரியரை ஸ்டார்ட் பண்ணியவர் விஜய் டிவிக்கு இடம்பெயர்ந்து நாடகங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் பிக்பாஸ் போட்டியாளர் என பலவகையிலும் பரிணமித்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தொடக்கத்தில் சற்று சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் கடந்த ஆண்டு வெளியான ஜோ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் ரியோ.
Also read: விஷ்ணு, சூரிக்கு இடையே சண்டையை தூண்டி விட்ட 3வது நபர்.. அட இதுக்கும் SK தான் காரணமா?