வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர்ந்து வரும் 5 இளம் ஹீரோக்கள்.. ட்ரெண்ட் செட்டராக இருக்கும் மணிகண்டன்

K Manikandan: தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இவர்களை தாண்டி அடுத்த கட்ட சினிமா என்பது எப்படி இருக்கும் என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது. தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை வரும் அளவிற்கு ஐந்து இளம் ஹீரோக்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

5 இளம் ஹீரோக்கள்

மணிகண்டன்: குட் நைட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார் மணிகண்டன். இந்த படத்திற்கு பிறகு தான் அவர் முந்தைய படைப்புகள் அதிகமாக கவனிக்கப்பட்டது. விக்ரம் வேதா, விசுவாசம் போன்ற மிகப் பெரிய ஹிட் படங்களுக்கு இவர் தான் வசனம் எழுதி இருக்கிறார். ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு என்னும் கேரக்டரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் இவர் முக்கியமானவர்.

கவின்: தமிழ் சினிமாவில் அடுத்த சிவகார்த்திகேயன் என்று கவினை அடையாளப்படுத்துகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வெற்றிக்காக மிகப்பெரிய அளவில் போராடிய கவின் தற்போது தொடர்ந்து வெற்றி படங்களில் தான் நடித்து வருகிறார். இவருடைய கைவசம் கிஸ் மற்றும் ஸ்டார் போன்ற படங்கள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறனின் தயாரிப்பின் தன்னுடைய ஏழாவது படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Also Read:எஸ் ஜே சூர்யாவுக்கு வரிசை கட்டி இருக்கும் 5 படங்கள்.. தனுஷ்டன் மோத போகும் நடிப்பு அரக்கன்

ஜி வி பிரகாஷ்: பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் அடல்ட் கன்டென்ட் படங்களில் நடிப்பதாக அவர் மீது ஒரு விமர்சனம் இருந்து வந்தது. ஆனால் சரியான இயக்குனர்கள் அவரை கரெக்டான கேரக்டரில் உபயோகப்படுத்தும் போது தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அப்படி வெளியான படங்கள் தான் நாச்சியார் , சிவப்பு மஞ்சள் பச்சை . ஜிவி பிரகாஷ் தொடர்ந்து இது போன்ற படங்களில் நடித்தால் கண்டிப்பாக முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வந்து விடுவார்.

மகேந்திரன்: மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர். நல்ல நடிப்பு திறமை இருக்கும் இவருக்கு வாய்ப்புகள் தான் குறைவாக கிடைக்கிறது. விழா படம் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக இவர் அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து நல்ல கதைகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

அசோக் செல்வன்: சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வந்த இவர் மன்மத லீலை படத்தில் கொஞ்சம் சறுக்கினாலும், மீண்டும் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விட்டார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவர், தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Also Read:நெப்போலியன் ஹீரோவாக மிரட்டிய 5 படங்கள்.. தென்காசி பட்டினத்தில் செம ரகளை செய்த KD & Co

Trending News