வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2026 முதலமைச்சராக போட்டியிடும் 5 இளம் அரசியல்வாதிகள்.. தளபதிக்கு யார் நெருக்கடி தெரியுமா?

5 Young Politicians Who Will Contest 2026 Chief Minister: மக்கள் சேவை, சமூகநலம், தொலைநோக்கு பார்வை என பலவற்றைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபட்டனர் நம் தலைவர்கள். இன்றைய நடைமுறையில் காலத்தின் கட்டாயமாகவே அரசியலில் நுழைந்து வெற்றி வாகைசூட போராடி வருகின்றனர் நம் இளம் தலைமுறை தலைவர்கள். அந்த வகையில் 2026 தேர்தலில் களம் காண உள்ள இளம் தலைவர்களை பற்றி காணலாம்.

உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினுக்கு பின் பழம் பெரும் திராவிட கட்சியான திமுக மொத்தமும் உதயநிதி ஸ்டாலினையே நம்பியுள்ளது. 46 வயதுடைய  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது விளையாட்டு அமைச்சராக இருக்கிறார். 2026  தேர்தலில்  வெற்றி பெறுவதை அடுத்து முதல்வர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அண்ணாமலை: இப்போது இருக்கும் முன்னணி அரசியல்வாதிகளில்  39 என வயது என மிகக் குறைந்த  வயது உடையவர் பாஜக தலைவர் அண்ணாமலை.  இவர் அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாடலில் முன்னேறியது போல் தமிழக அரசியலில் கடகடவென முன்னேறி வருகிறார். முட்டாள் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிரடி பேச்சுக்களால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அண்ணாமலை 2021 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து வெறி கொண்ட வேங்கையாக 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்க உள்ளார்.

Also read: மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி தளபதி விஜய் வரை.. இதுவரை கட்சி ஆரம்பித்த 11 நடிகர்கள்

விஜய்:சாணக்கியன் போல் பல வருடம் திட்டம் போட்டு  ஒரு வழியாக 49 வயதில் கட்சியை ஆரம்பித்து விட்டார் இளைய தளபதி விஜய். தமிழக வெற்றி கழகமாக உருவெடுத்து இருக்கும் விஜய்யின் மக்கள் இயக்கம் 2026 தேர்தலில் தீவிரமாக களம் இறங்க உள்ளது.”விஜய்  ஒரு தடவை முடிவு எடுத்துட்டாரு! இனி அவர் பேச்சா அவரே கேட்க மாட்டாரு!” விஜய் அரசியலுக்கு வருவதை உதயநிதி வாழ்த்தி இருந்தாலும் விஜய்க்கு பலமான நெருக்கடியை உதயநிதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான்: சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல் நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஆன 57 வயது நிறைந்த சீமான் அவர்கள் எந்த ஒரு கூட்டணியுடன் சேராது தனக்கென ஒரு தனி வழியை அமைத்து  சிஎம் ஆகிய தீர வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார். இதற்காக தற்போது இவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள எல்ஐசி திரைப்படம்.  விவசாயத்தை பேசி மக்களின் மனதை ஜெயிக்கப் போகிறாராம்.

அன்புமணி ராமதாஸ்: தமிழ்நாட்டில் 56 ஆண்டுகள் இரு கட்சிகளை மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது நாம் கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும்  ஆட்சி கட்டிலில் அமர முடியாதது ஏன் என்று தீவிர ஆலோசனை செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ்.

Also read: விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

Trending News