வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சினிமாவை கேவலப்படுத்த யூடியூப் மூலம் என்ட்ரிகொடுத்த 5 பேர்கள்.. பச்சை பச்சையாக பேசும் ஜிபி முத்து

5 Youtube celebrities got chance for tamil cinema: குருட்டாம் போக்கில் சர்ச்சைக்கு அஞ்சாமல் பிரபலமாவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் யூடியூபர்கள் சிலர் திரை துறையில் இருந்து வரும் வாய்ப்புகளையும் விடாமல் இறுக பற்றிக் கொள்கின்றனர். அவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் சில,

டிடிஎஃப் வாசன்: இருசக்கரவாகனம் மூலம் வித்தை காண்பித்து தனது சாகசத்தால் இளம் தலைமுறையினரிடம் யூடியூப் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். லட்சக்கான  சப்ஸ்கிரைபர்களை கொண்டு உள்ள டிடிஎஃப் வாசன் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பைக்கில் ஆவேசமாக சூலாயுதத்துடன்  வருவது போல் போஸ்டரை போட்டு ரசிகர்களை கதறவிட்டுள்ளார் டிடிஎப் வாசன்.

காத்து கருப்பு: தான் பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வக்கோளாறினால் இடக்கு மடக்காக கேள்வி கேட்டு பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருபவர் காத்து கருப்பு கலை. யுடியூப் இல் இவரது அலப்பறை தாங்காமல் ஓடும் பிரபலங்கள் பலர். இவர் தற்போது இரண்டு மூன்று படங்களில் கமிட் ஆகி இருப்பதாக தகவல். தமிழ் சினிமாவை புதிய பரிமாணத்திற்கு கொண்டு போகப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

Also read: டிடிஎஃப் வாசனுக்கு ஜோடி போட்டு வளர்வதற்கு முன்னரே வீணா போன ஹீரோயின்.. வாங்குன பெயர் எல்லாம் வீண்

ஜி பி முத்து: பச்சை பச்சையாக பேசும் ஜிபி முத்து டிக் டாக் இல் ஆரம்பித்து படிப்படியாக யூடியூப், இன்ஸ்டாகிராம், பிக் பாஸ், குக் வித் கோமாளி என இவரின் வெற்றி பயணம் அபார வளர்ச்சி கண்டது.  ஓ மை கடவுளே படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசம் செய்த ஜி பி முத்து தொடர்ந்து ஹர்பஜன் மற்றும் அர்ஜுன் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்திலும் நடித்துள்ளார்.

முகமது ரசூல்: சோபாவின் மூலம் பேமஸான குழந்தை நட்சத்திரம் முகமது ரசூல்  வயதுக்கு மீறிய தத்துவத்தை இயல்பாக பேசி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்டு உள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்க உள்ளார் முகமது ரசூல்.

திருச்சி சாதனா: சர்ச்சையான வீடியோக்களால் யுடியூப் மூலம் பிரபலமான திருச்சி சாதனா அவர்கள் சாகா என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு அருமையாக இருந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. இவருடன்  ரொமான்டிக் சீனில் நடிக்க காத்து கருப்பு கலை வாய்ப்பு கேட்டு உள்ளாராம்.

Also read: நாலு படங்களால் விழி பிதுங்கி நிற்கும் ஐசரி கணேஷ்.. பெயிலியர் ஹீரோக்களை நம்பி மோசம் போன தயாரிப்பாளர்

Trending News