வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மீண்டும் சன் டிவிக்கே வந்து தஞ்சமடைந்த 50 வயது பிரபல நடிகை.. பாத்தா இன்னும் இளமையாகத் தான் தெரியுறாங்க!

சன் டிவியில் ஒரு காலத்தில் தொடர்ந்து சீரியல்கள் செய்து கொண்டிருந்த அந்த நடிகை கடந்த சில வருடங்களாக சன் டிவி உடனான உறவை முறித்துக்கொண்டார். தற்போது மீண்டும் சன் டிவிக்கு வந்துள்ளது அங்கே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

சன்டிவி எப்போதுமே மார்க்கெட் போன முன்னணி நடிகைகளை வைத்து சீரியல் தயாரிப்பது வழக்கம். அப்படி சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன், ராதிகா, தேவயானி, குஷ்பு போன்ற பல நடிகைகள் சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளனர்.

இதில் குஷ்புவும் ராதிகாவும் சொந்தமாகவே சீரியல்கள் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால் சமீபத்தில் இருவருமே சன் டிவியை விட்டு விலகி விட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் குஷ்புவை பொருத்தவரை தற்போது மத்திய அரசின் கட்சியில் இருப்பதால் சன் டிவியை விட்டு விலகியதாக ஒரு வதந்தி உள்ளது. அதை அப்படியே வளர விடக்கூடாது என்பதற்காக மீண்டும் சன் டிவிக்கு திரும்ப வந்து விட்டாராம் குஷ்பூ.

விரைவில் குஷ்பு தன்னுடைய அவ்னி பிக்சர்ஸ் சார்பில் ஒரு புதிய சீரியலை தயாரித்து நடிக்க உள்ளாராம். நடிகை குஷ்புவுக்கு 50 வயது ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மீண்டும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

சன் டிவிக்கும் குஷ்புவுக்கும் இருந்த பஞ்சாயத்து அண்ணாத்த படத்தின் மூலம் தீர்ந்துவிட்டதாகவும் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக சன் டிவியில் பெரிய அளவு எந்த ஒரு சீரியலும் மக்களை கவரவில்லை என்பதால் குஷ்புவிடம் வலியப்போய் ஒரு புதிய சீரியலில் நடிக்க சொல்லி கேட்டதாகவும் கூறுகின்றனர்.

kusboo-cinemapettai
kusboo-cinemapettai

Trending News