ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டெஸ்ட் போட்டி என்பதை மறந்து ஒரே நாளில் 524 ரன்கள்.. பேயாட்டம் ஆடிய சூர்யகுமார் யாதவ்

உள்ளூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சூரியகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி பவுலர்களை பழி வாங்கியுள்ளார். இவர் ஆடிய ஆட்டத்தால் ஒரே நாளில் ஒரு அணி 524 ரன்கள் குவித்தது.

போலீஸ் இன்விடேஷனல் ஷீல்டு கிரிக்கெட் தொடர் போட்டிகள் 2005ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் நான்கு அணிகள் பங்குபெறும்.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் பார்சி ஜிம்கானா அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இது டெஸ்ட் போட்டியா இல்லை ஒருநாள் போட்டியா என்று அனைவரையும்  யோசிக்க வைத்துள்ளார்.

Suryakumar-Yadav
Suryakumar-Yadav

பார்சி ஜிம்கானா அணி 90 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக விளையாட, ஒரு பக்கம் சூர்யகுமார் யாதவ் பேயாட்டம் ஆடி 152 பந்துகளில் 37 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தமாக 249 ரன்கள் குவித்து எதிரணியை கதிகலங்க வைத்து உள்ளார். இந்தப் போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163.32 என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் ஒட்டுமொத்த ரன்களில் கிட்டத்தட்ட பாதி ரன்கள் சூர்யகுமார் யாதவ் மட்டுமே அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அந்த அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆதித்ய தாரே 123 பந்துகளில் 73 ரன்களும், சச்சின் யாதவ் 70 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். அணியின் கேப்டன் விக்ராந்த் 73 பந்துகளில் 52 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Trending News