திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒத்த கதாபாத்திரத்தில் பேச வைத்த நடிகர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. டான்சிங் ரோஸ் போல தள்ளாடும் 6 நடிகர்கள்

6 Actors: படத்தில் சிறிய கதாபாத்திரங்களாக காட்டப்பட்டாலும் தனக்கான நடிப்பினை வெளிக்காட்டி ஸ்கோர் செய்த நடிகர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பெறாத 6 நடிகர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

பிரம்மாண்டமாய் பார்க்கப்பட்ட கமலின் விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் ஜாபர் சித்திக். குள்ள மனிதராய் பார்க்கப்படும் இவருள் இவ்வளவு சிறப்பா என வியந்து பார்க்கும் அளவிற்கு தன் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இவரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும்.

Also Read: யோசிக்காமல் முடிவெடுத்த உதயநிதி.. ரெட் ஜெயண்ட் கை மாறியதால் வந்த வினை

இவரைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் பரம்பரை வீர விளையாட்டாய் பார்க்கப்படும் குத்து சண்டை கொண்டு கதை அமையப்பட்ட சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாய் தெறிக்க விட்டவர் தான் சபீர் கல்லரக்கல். இவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வெற்றியாய் அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் மாஸ்டர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று தெறிக்க விட்டிருப்பார் விஜய் சேதுபதி. இளம் பருவத்தில் வரும் விஜய் சேதுபதியாய் மகேந்திரன் இக்கதாபாத்திரத்தை ஏற்று தன் வெறித்தனமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். அவை படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும்.

Also Read: ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் கைது. இப்படத்தில் கார்த்திக்கு துணையாய் இடம் பெறும் காமாட்சி கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் தீனா. தன் நக்கலான நகைச்சுவையால் படத்தில் தனக்கான பெயரை ஸ்கோர் செய்திருப்பார். மேலும் இதே படத்தில் கான்ஸ்டபிள் ஆக ஜார்ஜ் மரியன் நடித்திருப்பார்.

நேர்மை வாய்ந்த போலீஸ் அதிகாரியாய் தன்னை நம்பி வந்தவர்களை பாதுகாக்கும் பணியை சிறப்புடன் செய்து இப்படத்தில் தனக்கான பெயரை ஸ்கோர் செய்திருப்பார். சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்த படம் தான் குட் நைட். இப்படத்தில் மணிகண்டனின் மாமாவாய் தன் எதார்த்தமான நகைச்சுவையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்புடன் நடித்திருப்பார் ரமேஷ் திலக்.

Also Read: சர்வதேச அளவில் ட்ரெண்டான தமன்னா.. காவலா பாட்டுக்கு காரணமான 2 பேர்

Trending News