வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய 6 நடிகர்கள்.. நிஜ சூப்பர்ஸ்டாராய் வாழும் ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் தங்களது இறப்பிற்குப்பின் தங்களது சொத்துக்களை வைத்து மாணவர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு பலவற்றை செய்து வருகிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சில நடிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து, தனது இறப்பிற்கு பின்பு பலருக்கு பயன்படும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். அப்படி தமிழ் சினிமாவில் உடலுறுப்புகளை தானம் செய்த நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி ஒரு முறை கண் மருத்துவமனையை திறந்து வைத்தபோது அனைவரின் மத்தியில் தனது கண்களை தான் இறந்த பின்பு தானமாக வழங்குவதாக அறிவித்தார். ஏற்கனவே விஜய் சேதுபதி ஏழை மாணவர்களுக்கு கல்வி செலவிற்காக அறக்கட்டளை அமைத்து உதவி வரும் நிலையில், விஜய் சேதுபதியின் கண் தானம் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது .

Also Read : சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!

மாதவன் : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், தனது 30 வது வயதில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். எலும்பு, மச்சை, நுரையீரல், கண்கள் என மொத்தம் ஒன்பது உறுப்புகளை நடிகர் மாதவன் தானம் செய்து மற்றவர்களையும் உடலுறுப்பு தானம் செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா மற்றும் பிரசன்னா : திரைத்தம்பதிகளான சினேகா, பிரசன்னா இருவரும் இணைந்து காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தங்களது உடல் உறுப்புகளை தம்பதிகளாக சென்று தானமாக வழங்கினர் .நடிகை சினேகா தற்போது தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக வலம் வரும் நிலையில், நடிகர் பிரசன்னா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Also Read : சன் பிக்சர்ஸ்கே கட்டளை போட்ட ரஜினிகாந்த்.. இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே பல தான தர்மங்களை, தான் சம்பாதித்த பணத்தின் மூலமாக வழங்கியவர். பாபா பக்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார். மேலும் வருடந்தோறும் கண்தான முகாம் சூப்பர் ஸ்டாரின் பெயரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா : நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் , அகரம் என்ற அறக்கட்டளை மூலமாக ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக 2014 ஆம் ஆண்டு வழங்கினார். மேலும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Also Read : சூர்யாவை தூக்கிவிட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

Trending News