ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாலாவிடம் அடிவாங்கிய 6  நடிகைகள்.. அடி வாங்கி தையல் போடப்பட்ட வாரிசு நடிகை..!

6 actresses who worked hard for Director Bala’s film: நிஜ வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை அப்படியே சினிமாவில் கண்முன் கொண்டு வருபவர் இயக்குனர் பாலா. தனது படைப்பிற்கு எந்த ஒரு பங்கமும்  வந்துவிடக் கூடாது என திரைக்கதையிலும் சரி, நடிகர்களிடமும் சரி எந்த ஒரு சமரசமும் செய்யாமல்  கறாராக இருப்பவர். நடிக நடிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வைக்க எந்த ஒரு எல்லைக்கும் போக தயங்க மாட்டார். அப்படி அவரிடம் மாட்டிய 6 நடிகைகள் இதோ 

நான் கடவுள் படத்தில் பூஜா ஸ்பெஷல் மேக்கப் போட்டு அசல்  கண் இழந்த பிச்சைக்காரியாகவே மாறி இருந்து காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருந்தார். திரைக்குப் பின்னால் இந்த கேரக்டருக்காக பல கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் இத்திரைப்படம் பூஜாவிற்கு நல்ல பெயரையும் புகழையும் வாங்கித் தந்தது. 

இயக்குனர் பாலாவிடம் கொஞ்சமா அடி வாங்கி பெயர் வாங்கின நடிகை என்றால் லைலாவாகத்தான் இருக்க முடியும். நந்தா பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்த லைலாவிற்கு  இந்த இரு படங்களுமே அவரது கேரியரில் ஒரு பிரேக் கொடுத்தது என்றால் மிகை இல்லை. பிதாமகனில்  சூர்யாவை துரத்தும் சீனில் லைலாவை நல்ல ஓட விட்டாராம்

Also read: ஓடிடி மட்டுமே குறிவைக்கும் 5 நடிகைகள்.. கிளாமர் காட்டியே பெத்த லாபம் பார்த்த ரெண்டு மில்க் பியூட்டிஸ்

பாலாபரதேசி படத்தில் நடித்த வேதிகா ஒரு பிரேக் வேணும் என்பதற்காகவே பாலாவின் இயக்கத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. படத்தில் நடித்த அனைவருமே அந்தகாலத்தில் நடைபெற்ற பஞ்சத்தை மற்றும் அடிமைத்தனத்தை கண் முன் நிறுத்த நிஜமாகவே அடி வாங்கி வேதனைப்பட்டார்களாம். இதில் பாலா குச்சியை வச்சு மிரட்டும் காட்சிகள் வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது

பாலா பல பேட்டிகளில் சினிமாவை பற்றி கூறும்போது சும்மா ஆடிட்டு போற நடிக, நடிகை எனக்கு தேவை இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் தத்ரூபமான காட்சியை கண் முன் நிறுத்த எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் நட்சத்திரங்களே எனக்கு வேணும் என்று  கூறியுள்ளார். அது போலவே பரதேசி படத்திலும் கங்காணியிடம்  அடி வாங்கிய தன்ஷிகா அடிமைத்தனத்தின் உச்சத்தை கண் முன் நிறுத்தி இருந்தார்

தாரை தப்பட்டை படத்தில் பல இடங்களில் வரலட்சுமி அடி வாங்கி இருப்பார். இப்படத்தில் அறிமுகமான புதுமுக வில்லன் ஆர் கே சுரேஷ் வரலட்சுமி அடிக்கும் சீன்களில் முதலில் மெதுவாக அடிக்க பின் பாலாவின் திட்டிற்கு பயந்து உண்மையாகவே அவர் நெஞ்சில் ஏறி மிதித்து எலும்பில் கிராக் விழுந்ததாம். அது மட்டும் இல்லாமல் ஒரு சீனில் கண்ணாடி குத்தி வரலட்சுமிக்கு ஸ்டிச்சிங் போடப்பட்டது. இவரது டெடிகேஷன் பார்த்த இயக்குனர் பாலா பல மேடைகளில் வரலட்சுமியை  புகழ்ந்து பேசினார்.

சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடிகையாக முதலில் ஒப்பந்தமானவர் கேரளத்து வரவு மமீதா பைஜூ. ஷூட்டிங்கில் பாலா நடித்து காண்பிக்க சொல்லி தோள்பட்டையில் தட்டியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பின்னர் பாலா சிறந்த இயக்குனர் அவர் தன்னை வழி நடத்துவதற்காகவே அப்படி செய்தார் என்றும் கூறினார். கலையின்கண் கொண்டு  பார்த்தால் நடிகைகளை கலைக்காக தானே என்று  எண்ண வைத்து விடுகிறது இந்த செயல்.  

Also read: பாலாவை சுத்தி சுத்தி அடிக்கும் ஏழரை சனி.. கடைசி வரைக்கும் வணங்காமல் போன வணங்கான்

Trending News