திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல்.. ரஜினி கதாபாத்திர பெயரை படமாக உருவாக்க வாசு போட்ட திட்டம்

6 Character Role: பொதுவாய் படத்தில் ஏற்கும் கேரக்டர் ரோலை கொண்டே, மக்கள் அவர்களை எளிதில் நினைவு கொள்கின்றனர். அவ்வாறு அமைந்த கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் வெற்றியினை பெற்று தந்திருக்கும். மேலும் படங்களில் நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

கமலின் பிரம்மாண்ட படைப்பாய் பார்க்கப்படும் விக்ரம் படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்தார் சூர்யா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ரோலக்ஸ் என்னும் பெயரை வைத்து தெறிக்க விட்டிருப்பார் லோகேஷ் கனகராஜ். தற்போது ரோலக்ஸ் என்னும் பெயர் மக்களிடையே பரவலாய் பேசப்பட்டு வருகிறது.

Also Read: கைதி 2-விற்கு முன் அதகளப்படுத்த வரும் இரண்டாம் பாகம்.. வில்லன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

2014ல் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் உருவான படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் அசால்ட் சேதுவாய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் பாபி சிம்ஹா. இந்த கேரக்டரும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இப்படத்தில் ரஜினி ஏற்ற கதாபாத்திரம் தான் வேட்டையன். பெரிதளவு ரீச் கொடுத்த இப்பெயரினை வைத்து ஒரு படம் எடுக்க திட்டம் தீட்டினார் பி வாசு என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் வேட்டையனின் நடிப்பு அந்த அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கும்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு போட்டியாக தொடர் பிளாப் கொடுக்கும் ரீ என்ட்ரி குயின்.. இப்படியே போனா தல தப்பாது

அதைத்தொடர்ந்து பல கோடி பிரம்மாண்ட படைப்பாய் உருவாகி, மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் பாகுபலி. இரு பாகங்களிலும் தன் விஸ்வாசத்தை வெளிகாட்டும் விதமாய் சத்யராஜ் ஏற்ற கட்டப்பா கதாபாத்திரம், படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும்.

இதைத்தொடர்ந்து லோக்கல் கேங்ஸ்டாராய் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் புதுப்பேட்டை. இப்படத்தில் தனுஷ் மேற்கொண்டு கொக்கி குமார் கதாபாத்திரம் படத்தில் பெரிதாய் ஈர்க்கப்பட்டது. இதைப் போன்று, 2001ல் விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை வேற லெவலில் பேசப்பட்டது. தன் இமேஜை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அப்படத்திற்கு தகுந்தவாறு காண்ட்ராக்டர் நேசமணி ஆகவே மாறி அசத்திருப்பார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி  மூட போகும் விஜய் டிவி

Trending News