2025 ஆம் ஆண்டு நிறைய பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே தைத்திருநாள் அன்று பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லா படங்களும் பின்வாங்கியது. குறிப்பாக நடிகர் விக்ரமின் வீர வீரசூரன், அஜித்குமாரின் விடாமுயற்சி போன்ற படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இப்பொழுது 6 பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர்.
தளபதி 69: விஜய் நடிப்பிற்கு எண்டு கார்டு போட்டுவிட்டார் தளபதி 69 தான் அவரது கடைசி படம் என அறிவிப்பும் வந்துவிட்டது. இந்த படத்தை ஹச் வினோத் இயக்கி வருகிறார். இது இந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
கூலி: சூப்பர் ஸ்டார், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரஜினிக்கு இந்த ஆண்டு ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்லைப்: எப்பொழுதுமே மணிரத்தினம் 40 முதல் 50 நாட்களில் ஒரு படத்தை முடித்து விடுவார். ஆனால் இந்த படத்தை மட்டும் 100 நாட்களுக்கு மேல் இயக்கி வருகிறார். இந்த படம் 90 சதவீதம் முடிந்து விட்டது, ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் செய்வதற்குதிட்டமிட்டு வருகின்றனர்.
வீரதீர சூரன்: தங்களான் படத்திற்கு பிறகு விக்ரம் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். இந்த படம் இந்த மாதம் இறுதியில் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இது பொங்கலுக்கு வரவிருந்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குட் பேட்அக்லி: விடா முயற்சி படத்திற்கு முன்னர் இந்த படம் ரிலீஸ் ஆகி விடும் போல் தெரிகிறது. இது இந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால் விடாமுயற்சி கதை இன்னும் இழுவையில் இருக்கிறது.
ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் ரெட்ரோ. இந்த படம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. அஜித் படங்கள் வராததால் அந்த நாளை கொண்டாட திட்டம் போட்டு விட்டார்கள் கார்த்திக் சுப்புராஜ், சூர்யா.