உழைக்கிற மாடு தான் ஊருக்குள்ள விலை போகும்.. எம்ஜிஆரை வைத்து நல்ல லாபம் பார்த்த 6 பிரபலங்கள்

இப்போது விஜய் மற்றும் அஜித் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் எப்படி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் தான் சிவாஜி, எம்ஜிஆர் படங்களை தயாரிக்கவும் போட்டி நடந்தது. அந்த வகையில் உழைக்கிற மாடு தான் ஊருக்குள் விலை போகும் என்பதை அறிந்த சில தயாரிப்பாளர்கள் எம்ஜிஆரை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரித்து நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள்.

சின்னப்பா தேவர் : எம்ஜிஆரை வைத்து கிட்டத்தட்ட 26 படங்கள் தயாரித்தவர் தான் சின்னப்பா தேவர். ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் ஒன்றாக படங்களில் பணியாற்ற தொடங்கினர். அதன்படி தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி எம்ஜிஆரின் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். மேலும் இவர்கள் கூட்டணியில் பெரும் தோல்வி அடைந்த படம் என்றால் தேர்த்திருவிழா மட்டும்தான்.

Also Read: மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்ட எம்ஜிஆர்.. தலை தெறிக்க ஓடிய முதலாளிகள் தஞ்சமடைந்த ஹீரோ

ஏவிஎம் : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பழம்பெறும் தயாரிப்பு நிறுவனம் தான் ஏவிஎம். எம்ஜிஆருக்கு மெய்யப்ப செட்டியார் என்றால் அவ்வளவு இஷ்டமாம். அவர் எது சொன்னாலும் அப்படியே கேட்டுக்கொள்வாராம். பல நடிகர்களை வைத்து ஏவிஎம் நிறுவனம் படங்கள் கொடுத்த நிலையில் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படம் தான் எடுத்தது. அன்பே வா என்ற ஒரே ஒரு எம்ஜிஆர் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தாலும் இப்படம் மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுத்தது.

நாகிரெட்டி : விஜயா- வாகினி ஸ்டூடியோவின் நிறுவனர் தான் நாகிரெட்டி. இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் தெலுங்கில் என்டிஆர் நடிப்பில் வெளியான ராமுடு பீமடு என்ற படத்தை தமிழில் எம்ஜிஆரை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்று எடுத்திருந்தார். இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.

Also Read: கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

டி ஆர் ராமண்ணா : இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் தான் டி ஆர் ராமண்ணா. சிவாஜி மற்றும் எம்ஜிஆரை ஒன்றாக வைத்து கூண்டுக்கிளி என்ற படத்தை இயக்கியிருந்தார். மேலும் இயக்குனராக எம்.ஜி.ஆருக்கு பல வெற்றி படங்களை இவர் கொடுத்த நிலையில், தயாரிப்பிலும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

கனகசபை செட்டியார் : எம்ஜிஆரின் தெய்வத்தாய் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் பணம் நெருக்கடியில் இருந்த போது கனகசபை செட்டியார் உதவி செய்தார். அதேபோல் மாட்டுக்கார வேலன் என்ற எம்ஜிஆரின் படத்தை இவர் தனது ஜெயந்தி பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Also Read: எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்

வீனஸ் கிருஷ்ணமூர்த்தி : எம்ஜிஆர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் ஒரு தாய் மக்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்கள் இடையே நல்ல நட்பு இருந்த காரணத்தினால் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி எது சொன்னாலும் எம்ஜிஆர் கேட்டுக் கொள்வாராம்.