வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்.. திருமண வாழ்க்கையில் ஜெயித்த 6 நட்சத்திர ஜோடிகள்

Ajith – Shalini: ‘மாலையிடும் சொந்தம், முடி போட்ட பந்தம், பிரிவென்னும் சொல்லே அறியாதது, ஒவ்வொரு தம்பதிகளுக்காககவும் எழுதப்பட்ட வரிகள். சினிமா ஜோடிகளை பொறுத்த வரைக்கும் ஒரு சில தம்பதிகள் தான் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில காலங்களாக பெரிய நட்சத்திர ஜோடிகள் எல்லாம் விவாகரத்து அறிவிப்பை சர்வ சாதாரணமாக அறிவித்து வருகிறார்கள். சினிமாக்காரங்க கல்யாணம் பண்ணினாலே இப்படி தான் பா என்ற விமர்சனங்களும் அதிகம் வளர்ந்து வருகிறது. காதலில் ஜெயித்து நல்லறமாக இல்லறம் நடத்தி வரும் நட்சத்திரங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி பட்ட 6 நட்சத்திர ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.

திருமண வாழ்க்கையில் ஜெயித்த 6 நட்சத்திர ஜோடிகள்

தேவயானி-ராஜகுமாரன்: தேவயானி அஜித், விஜய், கமல், சரத்குமார் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக இருந்த தருணம். அப்போதைக்கு அறிமுக இயக்குனராக இருந்த ராஜகுமாரனை காதலித்து, 2001-ல் திருமணம் செய்து கொண்டார். மும்பையில் இருந்து வந்த சுவடு தெரியாமல் அப்படியே தமிழ் பெண்ணாக 24 வருடங்களாக தன்னுடைய காதல் கணவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

அஜித்-ஷாலினி: ‘உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு’ என்று ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜித்தை பார்த்து கேட்பார். அந்த படம் முடிந்த கையோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள்.

சரண்யா-பொன்வண்ணன்: நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணனின் திருமண வாழ்க்கையும் வெற்றியில் தான் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய சரண்யா, இரண்டாவது இன்னிங்சில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். இந்த தம்பதியினரின் 2 மகள்களும் மருத்துவர்கள்.

உஷா – டி .ராஜேந்தர்: இன்றைக்கு சிம்புவின் அப்பா அம்மாவாக நமக்கு தெரியும் டி ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான். டி ராஜேந்தர் இயக்கிய ஒரு தலை காதல் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்த உஷாவை, காதலித்து 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 40 வருடங்களுக்கும் மேலாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் இந்த தம்பதியினர்.

சூர்யா-ஜோதிகா: காதலிச்சு கல்யாணம் பண்ணா சூர்யா ஜோதிகா மாதிரி வாழ்க்கை நடத்த வேண்டும் வேண்டும் என்பது, 90ஸ் மற்றும் 2கே ஹிட்ஸுகளின் கனவாக இருக்கிறது. திருமணம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் காதல் மற்றும் மரியாதை மலைக்க வைக்கிறது.

சினேகா-பிரசன்னா: தமிழ் சினிமாவில் தன்னுடைய இருப்பை பல ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டிருக்கும் புன்னகை அரசி சினேகா, பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இன்றுவரை எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.

Trending News