புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வான 6 போட்டியாளர்கள்.. உறுதியாக வெளியேறப் போகும் நபர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் நூறு நாட்களை நெருங்க உள்ளதால் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் ராம் மற்றும் ஆயிஷா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்த வகையில் இந்த வாரம் 6 பேர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இதில் மைனா நந்தினி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் அவரை யாரும் தேர்வு செய்ய முடியாது. ஆகையால் இந்த வார எவிக்ஷனில் இருந்து மைனா நந்தினி தப்பித்து விட்டார்.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

எல்லா வாரமும் நாமினேஷனில் இடம்பெறும் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் இந்த வாரமும் தேர்வாகியுள்ளனர். ஆனால் இவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதால் முதலில் இவர்கள் ரெண்டு பேரும் காப்பாற்றப்படுவார்கள். இவர்களைத் தொடர்ந்து அதிக ஈடுபாடு இல்லாத 4 பேர் தேர்வாகியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து எல்லாத்திற்கும் ஒரே ரியாக்ஷன் கொடுக்கும் ரக்ஷிதா இந்த வாரம் தேர்வாகியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஜனனி, ஏடிகே மற்றும் மணிகண்டன் ஆகியோரும் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளார்கள். அமுதவாணன், சிவின், தனலட்சுமி ஆகியோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

Also Read : பிக் பாஸில் ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம்.. இவ்வளவு லட்சங்களா?

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதில் மக்கள் மத்தியில் குறைந்த வாக்கு பெற்று மணிகண்டன் அல்லது ஏடிகே இவர்களுள் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் எப்போதுமே மணிகண்டன் ஒரு தலை பட்சமாக நந்தினிக்கு சப்போர்ட் செய்து வருகிறார். அதேபோல் ஏடிகேவும் தேவையில்லாத விஷயங்களுக்கு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த இவர்களுள் ஒருவர் இந்த வாரம் வெளியேற உள்ளனர்.

Also Read : ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

Trending News