ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக் பாஸில் அதிகமா நாமினேட் செய்யப்பட்ட 6 போட்டியாளர்கள்.. ஒரே ஆளை 8 முறை குத்தி கிழிச்ச ஹவுஸ் மேட்ஸ்

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் போட்டியாளர்களால் அதிகமாக நாமினேட் செய்யப்படுபவர்கள் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்தால் அவர்கள் தான் டைட்டில் வின்னர் என முடிவு செய்துவிடலாம். ஏனென்றால் அவர்களுக்கு மக்கள் தொடர்ந்து ஓட்டு போட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வைப்பது வெற்றியடைய செய்ய தான். அப்படி இந்த ஏழாவது சீசனில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட ஆறு போட்டியாளர்களை பற்றி பார்க்கலாம்.

8 முறை நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்

விசித்ரா: இந்த பிக் பாஸ் சீசனில் நடிகை விசித்ரா தான் எட்டு முறை நாமினேட் செய்யப்பட்டு தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறார். இதுவரை நடந்த சீசன்களில் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியவர்கள் முதல் இரண்டு வாரத்திற்குள்ளேயே வெளியேறி விடுவார்கள். ஆனால் 50 வயதை கடந்திருக்கும் விசித்ரா 85 நாட்களை தாண்டி உள்ளே இருப்பதோடு இப்போது டிக்கெட் 2 பினாலே டாஸ்கையும் விளையாடி வருகிறார்.

மணி: இந்த சீசனில் முதல் வாரத்தில் இருந்தே நடன கலைஞர் மணி சந்திரா மீது பார்வையாளர்களுக்கு பெரிதளவில் நாட்டம் இல்லை. . இருந்தாலும் இவர் எட்டு முறை நாமினேட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எந்த அளவுக்கு மக்கள் இவரை வெறுத்தார்களோ அதைவிட பல மடங்கு இப்போது இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள்.

Also Read:50 வயதிலும் இளசுகளை திணறவிடும் விச்சு.. அனல் பறக்கும் பிக்பாஸ் டிக்கெட் டு ஃபினாலே

பூர்ணிமா ரவி: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பார்வையாளர்களிடையே அதிக வெறுப்பை சம்பாதித்து வருபவர் பூர்ணிமா ரவி. இவர் இதுவரை ஆறு முறை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். மக்கள் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைக்கும் இவர் இன்றுவரை வீட்டிற்குள் இருந்து விளையாடி வருவது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மாயா: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மிகப்பெரிய சகுனி மாயா தான். மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால்தான் இன்று வரை கமலஹாசன் பெயர் டேமேஜ் ஆகி வருகிறது. மாயா இதுவரை ஆறு முறை நாமினேட் செய்யப்பட்டு எலிமினேஷன் ஆகாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு கமலஹாசனின் சப்போர்ட் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

தினேஷ்: தன்னுடைய தேவைக்காகவும், நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காகவும் எப்போதுமே தினேஷ் யாருக்கும் ஜால்ரா அடித்ததே இல்லை. இதனாலேயே இவர் ஆறு முறை இது வரை நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். மாயா, பூர்ணிமா, விசித்ரா என அத்தனை பேருடனும் நேருக்கு நேர் மோதும் தினேஷ் கண்டிப்பாக இறுதிப் போட்டியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீனா: ரவீனா இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்து முறை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த வாரம் அவரை பார்ப்பதற்கு வீட்டிற்குள் வந்த ஆன்ட்டி கண்டிப்பாக ரவீனாவை கையோடு கூட்டி கொண்டு வெளியே போய் விடுவார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் எப்படியோ தப்பித்து இப்போது டிக்கெட் 2 பினாலே டாஸ்கை விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Also Read:மாயாவை எலிமினேஷன் பண்ணவே முடியாது.. பிக் பாசில் நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி

Trending News