Sivakarthikeyan : இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். அவ்வாறு சில பிரபலங்கள் தங்களது மனைவியுடன் ஜோடியாக வந்து வாக்களித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இப்போது தனது மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளார்.
ஆர்த்தி சிவகார்த்திகேயன்
![sivakarthikeyan-arthi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/sivakarthikeyan-arthi.webp)
நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் ஜோடியாக வந்து வாக்களித்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரசன்னா உடன் வந்த சினேகா
![prasanna-sneha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/prasanna-sneha-473x1024.webp)
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்துகின்றனர். இப்போது இருவரும் சேர்ந்து வாக்களித்து உள்ளனர்.
மனைவி ஆர்த்தியுடன் வந்த வாக்களித்த ஜெயம் ரவி
![jayam-ravi-arthi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/jayam-ravi-arthi-1.webp)
அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக வாக்களிக்க இருவரும் ஜோடியாக வந்திருந்தனர்.
ஜோடியாக வந்த அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்
![ashok-selvan-keerthi-pandian](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ashok-selvan-keerthi-pandian.webp)
இயக்குனர் சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ இருவரும் தனது இரண்டு மகள்களுடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் குஷ்பூ பாஜகவில் தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் பொறுப்பில் இருக்கிறார்.
குடும்பத்துடன் வந்த குஷ்பூ
![kushboo-sundar-c](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/kushboo-sundar-c.webp)
சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஒன்றாக சேர்ந்து வாக்களித்து உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜகவுடன் இணைத்து கொண்டார். மேலும் ராதிகா விஜயகாந்தின் மகன் பிரபாகரனை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக வந்து வாக்களித்த ராதிகா சரத்குமார்
![radhika-sarathkumar](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/radhika-sarathkumar.webp)