ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நடிக்கும் ஆசையால் வாழ்க்கையை இழந்த 6 இயக்குனர்கள்.. தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் விஜய் பட டைரக்டர்

6 directors who lost their life because of their desire to act: தமிழ் சினிமாவில் இயக்குனராகிய தீருவேன் என்று பல முன்னணி  இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் மூலம் இயக்குனராகும் வாய்ப்பு பெற்று  போராடி வெற்றி பெற்று தடம் பதித்தவர்கள் ஏராளம்.

இருந்த போதும் நடிக்கும் ஆசையினால் இயக்குவதை விட்டு வந்து நடிகராக ஜொலிக்க முடியாமல் வெற்றி வாய்ப்பை இழக்கும் 6 இயக்குனர்களை காணலாம்.

சுந்தர் சி: மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. கலகலப்பு, அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கியவர் தலைநகரம் படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார்.  

தொடர்ந்து இவர் நடித்த முத்தின கத்திரிக்காய், இருட்டு போன்ற படங்கள் தோல்வியை தழுவின.

அமீர்: மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீருக்கு பருத்திவீரன் நல்ல பெயரை வாங்கித் தந்தது. யோகி படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார் அமீர்.

இன்று வரை இயக்குனராக வெற்றிக்காக காத்திருக்கும் அமீருக்கு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே வருகிறது.

சேரன்: பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு போன்ற தரமான சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து குடும்பப்பாங்கான படங்களை இயக்கியவர் சேரன். 

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற வெற்றி படங்களில்  நடித்திருந்தார் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் கை கொடுக்காது போகவே மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப உள்ளார்.

கௌதம் மேனன்: தமிழ் சினிமாவில் தடம் பதிக்க கௌதம் மேனன் போராடிய போராட்டங்களோ ஏராளம். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். 

தொடர் தோல்வியின் காரணமாக தான் இயக்கிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் நடிப்பு பக்கம் திரும்பி உள்ளார் என்பது செவி வழி செய்தி.

சசிகுமார்: அமீரின் உதவி இயக்குனராக இருந்து சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக  மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். பின் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த சசிகுமார், திரைத்துறையில் ஏற்ற  இறக்கங்களுடனே பயணித்தார். 

தற்போது மீண்டும் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்பது தகவல்.

லோகேஷ்: LCU என்கிற கான்செப்டை கொண்டு வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி  பாதையை அமைத்து கொண்டவர் லோகேஷ். இந்த வரிசையில் லோகேஷும் சேர்ந்துருவார் போல.

கைதி, விக்ரம், லியோ என தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் வெற்றி படங்களாக்கி வெற்றி படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தவருக்கு, போதாத காலம் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடலில் நடிக்கிறேன் என்று பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். 

Trending News