வெள்ளிக்கிழமையானால் தியேட்டர்களில் புது படங்கள் ரிலீசாவது வாடிக்கையான ஒன்றாய் மாறி வருகிறது. வார இறுதி நாட்களில் வரும் விடுமுறையை குறிவைத்து வசூலை அள்ளிவிடலாம் என இப்படி ஏற்பாடு செய்கின்றனர். கடந்த வாரம் ரிலீஸ் ஆன ஏழு படங்களில் லப்பர் பந்து மட்டும் நன்றாக இருந்தது .
சட்டம் என் கையில்: கடந்த வாரமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் நிதி நெருக்கடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் முதலாக காமெடி நடிகர் சதீஷ் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்
தேவாரா: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவர இருக்கிறது. கொரட்டலா சிவா இந்த படத்தை இயக்குகிறார். ஜூனியர் என்டி ஆருக்கு ஹீரோயினாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஹிட்லர்: வெள்ளிக்கிழமை ஹீரோ என பெயர் எடுத்த விஜய் சேதுபதியை மிஞ்சி விட்டார் விஜய் ஆண்டனி. வாரந்தோறும் இவருக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்,, சரண்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த வாரம் 27ஆம் தேதி இந்த படமும் ரிலீஸ் ஆகிறது
மெய்யழகன்: கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. இந்த படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் மெய்யழகன் படத்தையும் இயக்கியுள்ளார்.
சன்னி லியோனும், தனுஷ் செல்ல குட்டியும்
பேட்ட ராப் மற்றும் தில் ராஜா: டான்சை மையமாக வைத்து பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப். இந்த படத்தில் சன்னி லியோன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். அதைப்போல் இதில் ராஜா என்றும் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது இதில் துள்ளுவதோ இளமை ஷெரின், எட்டு வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கிறார். தனுஷ் மற்றும் ஷெரின் இருவருக்கும் அப்போதே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் ஆனது.