வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கங்குவா வசூலை காலி பண்ண வரும் 6 படங்கள்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையிலும் வசூல் குவித்து வருகிறது. அதன்படி, ரூ.150 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமரன் பட வசூலை கங்குவா முறியடிக்கும் என கூறப்பட்ட நிலையில், கங்குவா வசூலை காலி பண்ண வரும் 22 ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸாகவுள்ளன.

ஜாலியோ ஜிம்கானா

பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில், இயக்குனர் எஸ். ஜே.சீனு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. பிரபுதேவா கடைசியாக விஜயுடன் இணைந்து தி கோட் படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

நிறங்கள் மூன்று

அதர்வா, சரத்குமார், ரகுமான், அம்மு ரபிராமி ஆகியோர் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிறங்கள் மூன்று. த்ரில்லர் ஜர்னரில் இப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்துக்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. யானை படத்துக்குப் பின் 2 ஆண்டுகளுக்கு பிறகு அதர்வா படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பராரி

இயக்குனர் ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. இப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பற்றி பேசும்படமாக இப்படம் உருவாகியுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்தை ஹீரோ ஹரி ஷங்கர் தயாரித்துள்ள நிலையில், ஹீரோயினாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். சீன் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்பட த்தின் டீசர், ட்ரெயிலர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தூவல்

ராஜவேல் கிரிஷ்ணா இயக்கத்தில், ராம் கோபி, இலையா ராஜ்குமார்,. சுகன்யா திவ்யா உள்ளிட்ட புதுமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தூவல். இப்படத்தை சிங்கர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அருவிகளின் மீன்பிடித்து வாழும் மக்களைப் பற்றிய படமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் வரும் 22 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குப்பன்

சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் குப்பன். இப்படத்தில் தேவ், அதிராம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியவர் சரண்ராஜ். இப்படத்தை சரண்ராஜ், ஆதித்யா ஆகியோர் தயாரித்துள்ளானனர். காதல் மற்றும் நட்பை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எமக்கு தொழில் ரொமான்ஸ்

அசோக் செல்வன் . அவந்திகா மிஸ்ரா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில், இயக்குனர் பாலாஜி சேசவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். ப்ளூ ஸ்டார் படத்துக்குப் பின் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கங்குவா படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் 6 படங்கள் ரிலீசாகவுள்ளதால் கங்குவா வசூல் பாதிக்குமா? அல்லது அப்படங்களை ஓரம் தள்ளிவிட்டு கங்குவா தொடர்ந்து தியேட்டரில் இருக்குமா என்பது அப்படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும் எனக் கூறப்படுகிறது.

Trending News