செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

2023 எதிர்பார்ப்பை அதிகரித்த 6 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி லாபம் பார்த்த லோகேஷின் யுனிவர்ஸ்

இந்த வருடம் அடுத்தடுத்த ரிலீஸ் ஆக இருக்கும் ஆறு படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது அதிலும் ரிலீசுக்கு முன்பே படத்தின் ப்ரீ சேல் 500 கோடியை எட்டியதால் லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் உருவாகும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது.

ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து காரணத்தினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஜெயிலர் படத்தினை திரையரங்குகளில் வெளியிடப்படும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதுமே தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல பிரம்மாண்டத்திலும் பஞ்சமில்லாத படத்தை எடுக்கும் ஷங்கர் இந்தியன் 2 படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வார். ஆகையால் சங்கர் இயக்கம் காரணத்தினாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இதில் கமலஹாசன் உடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட இணைந்து நடிக்கின்றனர்.

Also Read: கேட்டாலே கொடுத்திருப்பேன்.. அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து அதிருப்தியில் ரஜினி

ஏகே 62: முதலில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தற்போது ஏகே 62 படத்தில் புது இயக்குனர் இணைவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது

தளபதி 67: விஜய், வாரிசு படத்திருக்கும் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பெரிய திரை பட்டாளமே நடிக்க உள்ளது. அதிலும் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஸ்கின், விஜய் சேதுபதி போன்ற மிகப்பெரிய வில்லன்கள் மத்தியில் விஜய் எப்படி ஸ்கோர் செய்யப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே இந்த படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. மேலும் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தையும் பயங்கர கேங்ஸ்டர் படமாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Also Read: தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்

வாடிவாசல்: சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி முதல் முதலாக இணையுள்ள வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எழுத்தாளர் செல்லப்பாவின் வாடிவாசல் என்று நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகுவதால் படத்தின் கதைக்காகவே வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகி உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவான வரலாற்று இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் இந்த படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

இவ்வாறு இந்த ஆறு படங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி இந்தப் படத்திற்காக எதற்காக ரசிகர்கள் இவ்வளவு ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் என்ற தகவலும் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Trending News