திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மண்ணை கவ்விய 6 படங்கள்.. ரஜினியால் தூக்கத்தை தொலைத்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடிகர் என்பதை காட்டிலும் தற்போது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பட்டையை கிளப்பி வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தை மண்ணை கவ்வ வைத்த 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

கேப்டன் : ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான கேப்டன் படம் வித்யாசமான கோணத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை உதயநிதி தான் வெளியிட்டு இருந்தார். ஆனால் இப்படம் போட்ட காசை கூட எடுக்க முடியவில்லை.

Also Read : விநியோகஸ்தராக ஒரு வருடத்தில் சாதித்துக் காட்டிய உதயநிதி.. தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த லாபம்

காபி வித் காதல் : சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காபி வித் காதல். இப்படத்திற்கு போட்டியாக வெளியான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தையும் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டது. லவ் டுடே படம் பெத்த லாபம் கொடுத்தல் நிலையில் காபி வித் காதல் காலை வாரிவிட்டது.

பீஸ்ட் : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி பெற்றிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஓரளவு லாபத்தை மட்டுமே பெற்று தந்தது.

Also Read : பலரை கேலி கிண்டல் செய்து வாயடைத்துப் போன உதயநிதி.. படு தோல்விக்குப் பின், இப்ப என்ன செய்யப் போறாரு

கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. இந்த படத்தின் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நினைத்த உதயநிதிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால் கோப்ரா படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

ராதே ஷ்யாம் : பிரபாஸ், பூஜா ஹெக்டே போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். தெலுங்கில் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றி இருந்தார். இப்படம் போட்ட பட்ஜெட்டில் பாதியைக் கூட எடுக்க முடியாமல் திணறியது.

அண்ணாத்த : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் செய்யும் என்று அவரின் அண்ணாத்த படத்தை உதயநிதி வெளியிட்டார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற உதயநிதி நினைப்பில் மண்ணை அள்ளி போட்டது. மேலும் இந்த படத்தால் உதயநிதி சில காலம் தூக்கத்தை தொலைத்து விட்டாராம்.

Also Read : ரஜினி இமயமலை போறது இதுக்கு தான்.. அதிர்ச்சியை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு

Trending News