முதல் நாள் வசூலில் அதிக லாபத்தை பார்த்த 6 படங்கள்.. விஜய்யை கடைசியில் தள்ளிய கல்கி பைரவா

Top 6 movies First Day Collection: எந்த நடிகர்கள் நடித்த படங்கள் அதிக வசூலை பெறுகிறதோ அவர்களை ஆட்ட நாயகன் ஆகவும், வசூல் மன்னனாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அதுலயும் முதல் நாள் முதல் ஷோ என்பது இந்திய சினிமாவில் தற்போது மிகப்பெரிய ட்ரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் எந்த நடிகர்களுக்கு FDFS அதிக புக்கிங் ஆகி இருக்கிறது என்பதை வைத்தே போட்டி நடைபெறுகிறது.

அப்படி வெளிவந்த படங்களில் எந்த படங்கள் முதல் நாள் வசூலில் அதிக லாபத்தை பார்த்து இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆர்ஆர்ஆர்: எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் RRR படம் வெளிவந்தது. இப்படத்தின் பட்ஜெட் 550 கோடி செலவு செய்து மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 1387 கோடி வசூலை பெற்று அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே இந்திய அளவில் 223 கோடி லாபத்தை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

பாகுபலி 2: எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 1 நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 250 கோடியில் எடுக்கப்பட்டு 1700 கோடி முதல் 1800 வரை லாபத்தை அடைந்திருக்கிறது. ஆனால் முதல் நாள் வசூலாக 218 கோடி லாபத்தை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.

மூன்று முறை ஆட்ட நாயகனாக ஜெயித்த பிரபாஸ்

கல்கி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் கல்கி படம் நேற்று அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. இதில் பிரபாஸ், பைரவா ஆக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளிவந்த முதல் நாளிலேயே இந்திய அளவில் 190 கோடி லாபத்தை பெற்று 3வது இடத்தை பிடித்திருக்கிறது.

சலார்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சலார் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தது. அந்த வகையில் சுமார் 270 கோடி செலவு செய்து மொத்தமாக 715 கோடி லாபத்தை பார்த்திருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் 178.7 கோடி லாபத்தை பார்த்து 4வது இடத்தில் இருக்கிறது.

கேஜிஎஃப் 2: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஸ் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேஜிஎப் படம் அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 10 மடங்குக்கு மேல் லாபத்தை கொடுக்கும் அளவிற்கு மொத்தமாக 1250 கோடி லாபத்தை பார்த்திருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் 165 கோடி லாபத்தை பார்த்து 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

லியோ: தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்தாலும் இந்த ஒரு படம் தான் பெயர் சொல்லும் அளவிற்கு இந்திய அளவில் முதல் நாள் அதிக வசூலை எடுத்து இருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்க்கும்பொழுது விஜய் நடித்த லியோ படம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த இப்படத்தின் பட்ஜெட் 350 கோடி வரை ஆகியிருக்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த லாபமாக 620 கோடி வசூலை அடைந்திருக்கிறது. இருந்தாலும் முதல் நாள் வசூலில் 6வது இடத்தில் இருக்கும் லியோ 149.5 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

இப்படி இந்த ஆறு படங்களிலும் கிட்டத்தட்ட பிரபாஸ் நடித்து வெளிவந்த மூன்று படங்கள் முதல் நாள் வசூலில் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. அத்துடன் இங்குள்ள இயக்குனர்களை விட பிரசாந்த் நீல் மற்றும் எஸ் எஸ் ராஜமவுலி படங்கள் பெரிய அளவில் வசூலை வாரி கொடுக்கிறது.

கல்கி படத்தின் அப்டேட்டுகள்

- Advertisement -