வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வருடத்தில் வெளியான படங்களில் கலக்கிய 6 கதாநாயகிகள்.. அழகிய லைலாவாக நடித்து கலக்கிய பூங்கொடி

6 best actress: பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரிய படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் பெருசாக மக்களிடம் ரீச் ஆகுவதில்லை. அதற்கு காரணம் அந்த படத்தின் மொத்த ஸ்கோரையும் ஹீரோ தட்டி தூக்கி விடுவார். அதனால் கிடைக்கிற கேப்புல நம்மளை பெரிசாக காட்ட வேண்டும் என்றால் சின்ன பட்ஜெட்டில் படங்களாக இருக்க வேண்டும். அல்லது ஹீரோவுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் ஸ்பெஷல் கேரக்டர் இருந்தால் நிச்சயம் மக்களிடம் பேரும் புகழும் கிடைத்துவிடும். அப்படி இந்த ஆண்டில் வெளியான படங்களில் கலக்கிய ஆறு கதாநாயகிகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

சுவாசிக்கா: இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிக்கா, சஞ்சனா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் மாதம் லப்பர் பந்து வெளிவந்தது. இப்படத்தில் தினேஷின் மனைவியாக சுவாசிக்கா அவருடைய கேரக்டரை எதார்த்தமாக கொடுத்து நடிப்பில் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்களிடம் அவருக்கென்று ஒரு முத்திரையை பெற்றுக் கொண்டார். இப்படத்திற்கு முன் கோரிப்பாளையம், சாட்டை போன்ற எக்கச்சக்கமான படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து படத்தில் யசோதை கேரக்டரில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது.

மாளவிகா மோகன்: மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துவிட்டு தமிழில் பேட்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து மாஸ்டர், மாறன் படங்களிலும் நடித்து ஒரு ஹீரோயின் என்ற முத்திரையை பெற்றுக் கொண்டார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஆர்த்தி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ஒரு சேலஞ்சிங்கான ரோல் பண்ணி இருக்கிறார் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துவிட்டது.

நிகிலா விமல்: தமிழில் அழகிய லைலா பாடல் எப்படி ரம்பாவை ஞாபகப்படுத்துகிறதோ, அதே மாதிரி மலையாளத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நிகிலா விமல் வரும்பொழுதெல்லாம் அழகிய லைலா பாடலை போட்டு அனைவரையும் முணுமுணுக்க வைத்தார். அந்த அளவிற்கு அழகிய லைலா பாடல் இவருக்கு ரொம்பவே சூட்டாக இருந்தது. மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து அதன் மூலம் தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி போன்ற படங்களில் நடித்துவிட்டு சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழைப் படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து அனைவரையும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களிடம் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சாய்பல்லவி: இவரைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை விஷயங்கள் இருக்கும். எங்கே போனாலும் கலாச்சாரத்தை மறக்காத அளவிற்கு நடை உடை பாவனை என அனைத்திலும் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். சிரித்தால் கொள்ளையழகு, நடனம் ஆடினால் கண்ணிமைக்காமல் பார்க்கலாம், பேசினால் மெய்சிலிர்க்கும், நடித்தால் ரசிக்கலாம் என்பதற்கு ஏற்ப சாய்பல்லவி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்ததன் மூலம் இந்து ரெபக்கா கேரக்டரை தூக்கி நிறுத்திருக்கிறார்.

அன்னா பென்: மலையாள படங்களின் மூலம் அறிமுகமான அன்னா பென் கல்கி 2898 என்ற படத்தில் ஹைரா கேரக்டரின் மூலம் பரிச்சயமானார். இதன் பிறகு வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த கொட்டுக்காலி படத்தில் மீனா என்ற கேரக்டர் மூலம் மொத்த நடிப்பையும் கொட்டி ஹீரோயின் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார்.

கௌரி பிரியா ரெட்டி: தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான கௌரி பிரியா ரெட்டி, தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த லவ்வர் என்ற படத்தில் திவ்யா என்ற கேரக்டர் மூலம் மொத்த கதையும் தூக்கி நிறுத்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் இவருடைய நடிப்பு தான் பிளஸ் என்று சொல்லும் அளவிற்கு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Trending News