சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சமீபத்தில் விபரீத முடிவு எடுத்திருக்கும் 6 நடிகர்கள்.. சூழ்ச்சி கடலில் சிக்கி கொண்டிருக்கும் சூர்யா

Actor Surya: இவங்க எல்லாரும் நல்லா தானே இருந்தாங்க, திடீர்னு ஏன் இந்த முடிவு என சாமானிய மக்களும் புலம்பும் அளவுக்கு ஆறு நடிகர்கள் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்கள். திடீரென தன்னுடைய ரூட்டை மாற்றப் போவதாக இவர்கள் தெரிவித்திருக்கும் இந்த முடிவு அவர்களுடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், அவர்களை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. அப்படிதமிழ் சினிமாவின் முக்கியமான ஆறு நடிகர்கள் எடுத்திருக்கும் விபரீத முடிவை பற்றி பார்க்கலாம்.

விபரீத முடிவு எடுத்திருக்கும் 6 நடிகர்கள்

விஜய்: தமிழ் சினிமாவின் பொருளாதார என்பது நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் கொடுக்கும் வசூல், அவருடைய வசூலை பிரேக் பண்ண போராடும் மற்ற நடிகர்களின் படங்கள் என்பதை தான் மையமாகக் கொண்டு இப்போது இருக்கிறது. இப்படி கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக் கொண்டிருந்த விஜய் அரசியல் கட்சி தொடங்கியதோடு, தன்னுடைய 69ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் என்பது பிராண்டாக மாறிவிட்டது. தொடர்ந்து ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் ஃபெயிலியர் ஆவதும், அதைத்தொடர்ந்து வில்லனாக நடிக்கும் ஒரு படம் பெரிய அளவில் கடந்த சில வருடங்களாக அவருடைய சினிமா பாதையில் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இனிமேல் நெகட்டிவ் ரோல் மற்றும் கேமியோ ரோலில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்திருப்பதாக விஜய் சேதுபதி அறிவித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன்: மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை காதலில் உருக வைத்த கௌதம் வாசுதேவ் மேனனின் நடிப்புக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவருடைய நடிப்பை போலவே குரலும் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார். ஆனால் இப்போது இனி நடிக்கப் போவது இல்லை, சினிமா மட்டுமே இயக்கப் போவதாக முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read:சூர்யாவால் முடியாத விஷயத்தை சாதித்து காட்டிய பிரபல நடிகர்.. பதட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்

சித்தார்த்: இப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதை அசால்டாக நடித்து முடிக்க கூடியவர் சித்தார்த். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் பின்னணி பாடுவதிலும் பெஸ்டாக இருக்கும் இவர், சமீப காலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் பாடல்கள் பாடுவதையே பொழுது போக்காக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மிஸ்கின்: தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிஸ்கினும் ரொம்ப முக்கியமான ஒருத்தர். அவர் இயக்கிய படங்களுக்கு இருந்த வரவேற்பை விட, நடித்த படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. திடீரென டைரக்ஷன் மற்றும் நடிப்பு இரண்டையும் விட்டுவிட்டு இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சூர்யா: தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சூர்யாவின் முழு கவனமும் இப்போது இந்தி திரை உலகிற்கு திரும்பி விட்டது. பாலிவுட்டை பொறுத்த வரைக்கும் சிறந்த நடிப்பு, திரைக்கதை என்பதெல்லாம் ஒரு பெரிய பொருட்டே இல்லை. அங்கு நெப்போடிசம் மட்டும்தான் தலை விரித்தாடி கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மகாகடலில் சூர்யா எப்படி வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை.

Also Read:ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

 

 

Trending News