திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குடிக்கு அடிமையான 6 முன்னணி ஹீரோக்கள்.. அதிலும் இந்த ஒருத்தர் ரொம்ப மோசம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சில பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் விளங்கும் நடிகர் விஜயகாந்த், சுமார் 150 படங்களுக்கு மேலாக நடித்து பிரபலமானவர். 90களில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தியேட்டரில் தாறுமாறாக ஓடி பட்டையை கிளப்பும்.

அப்படிப்பட்ட விஜயகாந்த் தினமும் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சினிமாவிலும் அரசியலிலும் கவனம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியவர் கலாபவன் மணி. நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் மற்றும் சிறந்த பாடகரும் கூட. கேரளாவில் பிறந்த கலாபவன் மணி தன்னுடைய நடிப்பினால் எக்கச்சக்கமான விருதுகளை வாங்கிக் குவித்தவர்.

இவ்வாறு தென்னிந்திய படங்களின் ஜாம்பவானாக விளங்கிய கலாபவன் மணி, கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உடல்நலனை தடுத்துக் கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அடுத்தது தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த கவுண்டமணி. கடைசியாக 2016ம் ஆண்டு நடித்தவர், அதன்பிறகு சினிமா பக்கம் தலை காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவருடைய குடிப்பழக்கம். தற்போது 82 வயதுடைய கவுண்டமணி மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் தன்னுடைய 71-வது வயது வரை ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தினமும் குடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது சிலரை வியப்பில் ஆழ்த்துகிறது. இருப்பினும் ரஜினிகாந்த் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் மது அருந்துவதை தினசரி வழக்கமாக கொண்ட பழக்கமுடையவர்.

நடிகர் விஜயகுமார், தமிழ்சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பெயர்பெற்ற விஜயகுமார் தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப் கொண்டவர். அடுத்தபடியாக தற்போது கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஏனென்றால் என்ன கதாபாத்திரத்திலும் தன்னுடைய கச்சிதமான நடிப்பை வெளிக்காட்ட இருக்கும் விஜய் சேதுபதி, கட்டுப்பாடான முறையில் தினசரி குடிப்பழக்கத்தை மேற்கொள்ளும் நபர் என்பது பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை. ஆகையால் மேற்கண்ட ஆறு சினிமா பிரபலங்கள் குடிக்கு அடிமை ஆனாலும் குறிப்பாக கலாபவன் மணி குடியினால் தனது உயிரையே இழந்தது மட்டுமல்லாமல் சினிமாவில் முன்மாதிரியாக இருந்து, பல கலைஞர்களை உருவாக்கியிருக்கும் வாய்ப்பை கடவுள் கொடுத்தாலும் அதை குடியினால் செய்ய தவறியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News