வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கால சுத்தின பாம்பாட்டம் ரஜினியை உலுக்கிய முக்கியமான 6 பிரச்சனைகள்.. சைக்கோவாக திரிந்த காலங்கள்

6 major problems Rajini has face: சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவர், இப்போது சூப்பர் ஸ்டார் ஆக உச்சம் பெறுவதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல. இன்று ரஜினி தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது வரை ரஜினி தன்னுடைய வாழ்க்கையில் 6 முக்கியமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் வெளியான அன்னை ஓர் ஆலயம் படத்தில் ஒரு தாய்- மகன் இருவருக்கும் இடையே இருக்கும் போராட்டத்தை காட்டினர். இந்த படத்தில் ரஜினி ஒரு சைக்கோ போலவே நடந்து கொள்வார். இந்த படத்திற்காகவே அவர் ஆறு மாதம் மெண்டல் போலவே இருந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணுல படுற பொருட்களை எல்லாம் போட்டுடைத்து நொறுக்கினார். அதையே படமாக்கி விட்டனர். மேலும் மது, புகை பிடிக்கும் பழக்கம் ஓவரான ரஜினி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அதிலிருந்து மீண்டு வந்தார். ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கூட தன்னுடைய ரசிகர்களை குடிக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார்.

அதேபோல் ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகும் என நம்பிய பாபா படம் அநியாயத்திற்கு பிளாப் ஆனது. மேலும் அந்த படத்தை கடந்த வருடம் ரீ ரிலீஸ் செய்தனர். அப்போது கூட வசூலில் மண்ணை கவ்வியது பெரும் கொடுமை. அதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ரஜினிக்கு பக்கவாதத்தில் ஒருவகையான ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக் ஏற்பட்டிருப்பது. இவர் முன்பெல்லாம் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகை பிடிப்பது, மாமிசம் சாப்பிடுவது என ஓவராக ஆடியதால் ரொம்பவே உடம்பு மோசமாயிருச்சு. அதன் பின் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்பு தான் உடல் நலம் தேறியது.

Also Read: சத்தம் இல்லாமல் 10 நாளில் அனிமல் படம் செய்த வசூல் சாதனை.. ஓவர் அலப்பறை காட்டிய லியோ, ஜெயிலர்

ரஜினி சந்தித்த முக்கியமான 6 பிரச்சனைகள்

மேலும் ரஜினி அரசியலுக்கு வருவார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்றும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனா அரசியல் அழுத்தத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் உடல் நலம் மோசமானது. அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வர மாட்டேன் என ஆணித்தரமாக சொல்லி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

மேலும் ரஜினியின் இரண்டு மகள்கள் அவருக்கு பெரிய தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இளைய மகள் சௌந்தர்யா முதல் திருமணத்தை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதேபோல் தான் இப்போது தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் திடீரென்று பிரிவதாக அறிவித்தனர். இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என ரஜினி ரொம்பவே முயற்சித்தார். ஆனால் எதுவும் எடுபடல, அதன் பின் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு ஏற்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இந்த வருடத்தில் இமயமலையில் ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு வரும்போது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த தொட்டு கும்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வயதில் குறைந்தவராக இருந்தாலும் அவர் யோகி அவருடைய காலை தொட்டு கும்பிடுவது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற ரஜினி விளக்கம் கொடுத்தார்.

அதுமட்டுமல்ல அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று தளபதி ரசிகர்கள் ஒரு பக்கம் கோசம் போட துவங்கினர். இதனால் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் காக்கா- கழுகு கதை சொல்லி தளபதி ரசிகர்களை அலறவிட்டார். இதனால் சோசியல் மீடியாவில் ரஜினி பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

Also Read: அபூர்வ ராகங்கள் முதல் தலைவர்-171 வரை அசுர வளர்ச்சியால் வாங்கிய சம்பளம்.. பரட்டையால் ஏமாற்றப்பட்ட ரஜினி

Trending News