சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ஜகா வாங்கிய அஜித்தின் விடாமுயற்சி!. பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளும் 6 மினி, மீடியம் பட்ஜெட் படங்கள்!

Vidaamuyarchi: அண்ணன் எப்போ எந்திரிப்பான், திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருப்பார்கள்.

அப்படித்தான் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவில்லை என்றதும் ஆறு மினி மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டன. அந்த ஆறு படங்களை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

6 மினி, மீடியம் பட்ஜெட் படங்கள்!

வணங்கான்: இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு இருக்கும் என்ற காரணத்தால் இந்த படத்திற்கு தியேட்டர் கிடைப்பது கொஞ்சம் சிக்கலாக இருந்தது.

இந்த நிலையில் அஜித் பின் வாங்கியதால் வணங்கான் எந்தவித இடையூறும் இல்லாமல் தியேட்டர் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கேம் சேஞ்சர்: பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் படம் என்றால் அது கேம் சேஞ்சர் தான்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Ten Hours: புது முக இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் தான் 10 ஹவர்ஸ்.

இந்த படத்தைப் பற்றி இதற்கு முன்னதாக எந்த ஒரு அறிவிப்புமே வெளியாகவில்லை.

அஜித் படம் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசில்லை என்று தெரிந்தது அதிரடியாக இன்று மதியம் பட குழு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது.

சுமோ: வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவா நடித்திருக்கும் சுமோ படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

வழக்கம் போல மிர்ச்சி சிவாவின் நக்கல் நையாண்டி உடன் இந்த படம் உருவாகி இருக்கிறது.

மெட்ராஸ்காரன்: மலையாள நடிகர் ஷேன் நிஜாமின் தமிழ் அறிமுக படம்தான் மெட்ராஸ்காரன் இந்த படத்தில் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

தருணம்: தேஜாவு படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்ற இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் தருணம்.

இந்த படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News